பாலியின் மத்தியப் பகுதி சுற்றுலா வழிகாட்டி
 மத்தியப் பாலியில் உள்ள டேகல்லங் எனும் இடத்தின் காட்சி (19 June, 2004) © Timothy Tye using this photo
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
Central Bali covers the former Kingdom of Gianyar, a regency of Bali that today still holds many noble houses or puri of the old kingdom. This is where you can find many of the Balinese fine arts and handicraft industries. It is the home of crafts such as gold and silversmithing as well as music and performing arts.
 படுபுலன் என்ற பகுதியில் பாலி நாட்டுக் கலை வண்ணத்தில்
கட்டப்பட்டு உள்ள கட்டிடம்
(18 June, 2004) © Timothy Tye using this photo
கியான்யர் (Gianyar) என்ற இடத்தில் இருந்த அரசின் பிரதிநிதியின் பல இடங்களை உள்ளடக்கிக் கொண்டது பாலியின் மத்தியப் பகுதி (Central Bali ) . இன்றும் அந்த அரசின்போது இருந்த உயர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் வீடுகள் இங்கு உள்ளன. இங்கு பாலியர்களின் அருமையான கைவேலைபாடுகளினால் செய்யப்படும் பொருட்களை தயாரிக்கும் தொழிலகங்களைக் (handicraft industries) காணலாம். மேலும் தங்க வெள்ளி நகைகளை செய்பவர்கள், இசைக் கருவிகள் செய்பவர்கள் போன்றவர்கள் உள்ளதைக் காணலாம்.
கியான்யர் என்பது ஆயுங் நதி (Ayung River) மற்றும் மேலங்கிட் (Melangit River) நதிகளுக்கு இடையே உள்ளது. இந்த இடங்களில் பாலியின் பழைய நாகரீகம் உள்ளதைக் காணலாம். மேலும் இந்தப் பகுதியில்தான் முன்னர் ஒரு காலத்தில் பாலியின் தலைநகரமாக இருந்த உபுத் (Ubud) எனும் கிராமமும் உள்ளது.
 புற தீர்த்த எம்புலில் புனித நீரைக் கொட்டும் குழாய்கள் (18 June, 2004) © Timothy Tye using this photo
ஒன்பது மற்றும் பதினோராவது நூற்றாண்டில் (9th to 11th century) பாலியை இந்து மற்றும் புத்த மதத்தை (Hindu-Buddhist kingdoms) சார்ந்தவர்களே ஆண்டு வந்தார்கள். உபுடில் இருந்து சற்று தொலைவில் உள்ள பெஜெங் மற்றும் பெடுலு (Pejeng and Bedulu) போன்ற கிராம பகுதிகளில் அவர்கள் ஆட்சி இருந்தது. பதினாலாம் நூற்றாண்டில் (14th century) மேஜாபபிட் (Majapahit) ஆட்சி அமைந்தபோது 18 ஆம் நூற்றாண்டுவரை அவர்களின் அதிகாரம் க்ளுங்குங் (Klungkung) என்ற இடத்தில் தழைத்து வந்தது. அப்போது க்ளுங்குங் மன்னர்கள் இரண்டுப் பிரிவினராகப் பிரிந்து செல்ல அவர்களின் ஆட்சி இரு இடங்களில் அமைந்தது. அவர்களின் ஒரு பிரிவினரின் ஆட்சி ஒன்றுதான் கியான்யாரில் அமைந்தது.
1930 ஆம் ஆண்டுகளில் அங்கு வந்து தங்கிய ஐரோப்பியர்களினால் பண்டைய பாலியின் கலாசாரம் வெகுவாக வளர்ந்தது. அங்கு செய்யப்பட்டு வந்த கைவினைப் பொருட்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் அங்கிருந்த பல விவசாயிகள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயத்துடன் சேர்த்து கைவினைப் பொருட்களை செய்யும் கலையும் வளர்த்துக் கொண்டார்கள்.
இன்று பாலியின் மத்தியப் பகுதிகளான படுபுலன் (Batubulan) , செலுக் (Celuk), படுவன் (Batuan), சுகவாடி(Sukawati), மாஸ் (mas) மற்றும் உபுத் (Ubud) போன்ற கிராமங்கள் அப்படி வளர்ச்சி அடைந்த கிராமங்களில் ஒன்றாக உள்ளன. அங்கெல்லாம் சென்று பார்க்க ஒரு வண்டியில் செல்வதே சிறப்பு.
Location Map of Central Bali
மத்திய பாலியின் வரப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக் செய்யவும்.
 ஆயுங் நதிப் பகுதியில் விவசாய நிலங்கள் (18 June, 2004) © Timothy Tye using this photo
|
|