வடக்கு மற்றும் மேற்கு பாலி சுற்றுலா குறிப்புக்கள்
 North and West Bali Travel Guide: Pura Batu Bolong (19 June, 2004) © Timothy Tye using this photoTranslated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
வடக்கு மற்றும் மேற்கு பாலி நதிக் கரை பிரதேசமாகவும், அதிகம் மக்கள் வாழாத நிலமாகவும் இருந்தாலும் அதன் கடற்கரைப் பகுதிகளில் பெருமளவில் மக்கள் உள்ளனர். அந்த கடல் பிரதேசங்களே பாலி மற்றும் ஜாவாவை இணைக்கும் பாலம் போல உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பிரதேசங்கள் 'தபனன்' (Tabanan), 'ஜெம்பிரானா' (Jembrana), மற்றும் 'புலேலேங்' (Buleleng) போன்றவை. அவற்றின் தலைமை இடங்கள் தபனன் நகரம் (Tabanan town), 'நெகாரா' (Negara) மற்றும் 'சிங்கராஜா' (Singaraja) போன்றவை ஆகும்.
 பிரடன் ஏரியில் மீன் பிடிக்கும் குடிசை (19 June, 2004) © Timothy Tye using this photo
தெற்கு பாலியில் இருந்து மேற்குபுறமாகச் செல்லும்போது அங்குள்ள மக்களின் வாழ்கையும் பூமியும் (terrain) மாறுபட்டுக் கொண்டு இருப்பதைக் காணலாம். பச்சை பசேல் என்கின்ற விவசாய நிலங்கள் இல்லாத காட்டுப் பிரதேசமாக (forests) நகரங்கள் திகழ்வதைக் காணலாம். பாலியின் இந்துக்கள் அல்லாத (Balinese Hindu) முகமதியினர் (Muslim) அதிகம் வசிக்கும் பகுதிகாளக நகரங்கள் காணப்படும்.
 பூர உலுன் தனு பிரடன் (19 June, 2004) © Timothy Tye using this photo
வடக்கு மற்றும் மேற்கு பாலி மலைப் பிரதேசமாக உள்ளன. அந்த மலைகளே வடக்கு மற்றும் மேற்கு பாலியைப் பிரிக்கும் இயற்கை சுவர் போல (natural barrie) அமைந்து உள்ளது. ஆனால் இந்த இரண்டு பிரதேசங்களும் ஜாவனியர்களின் (Javanese) ஆதிக்கத்தால் சூழப்பட்டு உள்ளது.
தெற்கு பாலியின் பல இடங்கள் 'தபனனின்' (Tabanan) ராஜ்யப் பகுதிகளை உள்ளடக்கிக் கொண்டு உள்ளன. 'தபனனோ' மேற்கு பாலியின் ஒரு பகுதியாகும். அந்த கடல் நிலப் பகுதியில் 'பூர தனாஹ் லோட்' (Pura Tanah Lot) மற்றும் 'பூர படு போலாங்' (Pura Batu Bolong) போன்ற ஆலயங்களைப் பார்க்கலாம்.
 பிரடன் ஏரியில் மீன் பிடிக்கும் குடிசை (19 June, 2004) © Timothy Tye using this photo
'புலேலேங்' (Buleleng) ராஜ்யப் பாதியின் கடல் பகுதியின் சிறிய வால் போன்றப் பகுதி மலை மற்றும் கடலுக்கு இடையில் அமைந்து உள்ளது. 1849 ஆம் ஆண்டு 'டச்' (Dutch) நாட்டினர் சிங்கராஜாவை சேர்ந்த 'புலேலேங்' பகுதியை கடுமையாகத் தாக்கி 1855 ஆம் ஆண்டு அதை வீழ்த்தினர். அங்குள்ள பல இடங்களில் காணப்படும் சிற்பங்கள் ஐரோப்பியக் கலையுடன் பழைய காலத்துக் கலையை கலந்து வடிவமைத்துள்ள நிலையைக் காட்டுகின்றன. முக்கியமாக ஆலயங்களில் உள்ள அசுரர்களின் சிற்பங்கள், சிற்ப வடிவங்கள் (demons and floral motifs) அவற்றை பிரதிபலிக்கின்றன.
 மேன்ஜங்கன் தீவில் காணப்படும் கடல் பிராணிகளான ஹிப்போகாம்புஸ் பர்கிபண்டி Author: O.J. Brett, Norway (public domain)
மேற்கு பாலி அடர்ந்த காட்டுப் பிரதேசமாகவே உள்ளது. அங்குள்ள பார்க்கில் பல அரிய பிராணிகள், அழிந்து வரும் பிராணிகள் போன்றவை காணப்படுகின்றன. அதன் கடற்கரைகளில் ஜாவாவில் (Javanese) இருந்து வந்து குடியேறிய மக்கள் , 'புகிஸ்' (Bugis) என்ற இனத்தவர் மற்றும் சீனர்கள் (Chinese) போன்றவர்கள் வசிக்கின்றனர்.
வடமேற்கு முனைப் பகுதியில் உள்ள சிறு தீவே 'மேன்ஜங்கன்' (Menjangan Island) என்பது. இங்கு பலவிதமான கடல் தாவரங்களைக் (marine life) காணலாம்.
 சூரிய உதயத்தின்போது டால்பின் போன்றவற்றைக் கண்டு ரசிக்கும் பகுதி Author: Currawong 276 (public domain)
|
|