பாலி பறவை பார்க்

Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலி பறவை பார்க் (Bali Bird Park) என்பது சிங்கபாடு (Singapadu) மற்றும் படுபுலன் (Batubulan) என்ற இரண்டுக்கும் நடுவில் உள்ளது. இதை 1995 ஆம் ஆண்டில் அமைத்தார்கள். இந்தப் பார்க்கில் இந்தோனேசிய, ஆஸ்திரேலிய (Australia), ஆப்ரிக்கா (Africa), அமேரிக்கா(America) மற்றும் பாலி (Bali) நாடுகளை சேர்ந்த அபூர்வமான 250 வகை பறவைகளின் 1500 பறவைகளை காணலாம்.
இங்கு மெல்ல மெல்ல அழிந்து வரும் சில பறவைகளின் இனங்களும் உள்ளன. இங்கு பறவைகளின் இனப் பெருக்கத்திற்கான வழிமுறைக் காரியங்களும் நடைபெறுகின்றன. அதன் மூலம் பாலியின் பஸ்கோயட் (Pasquet's Parrot) என்ற அபூர்வமான கிளியின் இனப் பெருக்கமும் அதிகரித்து உள்ளது.
இங்குள்ள பறவைகளைக் காண வரும் பயணிகள் மற்றும் பறவைகளின் உடல் நலத்துக்கும், பறவை வியாதிகள் (bird virus) பரவாமல் தடுக்கவும் இங்குள்ள சுற்றுலா பயணிகளின் நடைப் பாதைகள் கூட கிருமித் தடுப்பு (disinfectant) நாசினிகளினால் பாதுகாக்கப்பட்டு உள்ளன.
மேலும் இங்குள்ள பார்க்கில் 50 வகை தாவரங்களின் 2000 அபூர்வ மரங்களும் செடிகளும் உள்ளன. இந்தப் பார்க் காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படுகின்றது.
Location Map of Bali Bird Park
இந்தப் பார்க் உள்ள இடத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|
|