பாலி ஊர்ந்து செல்லும் பிராணிகளின் பார்க் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
‘பாலி’ ஊர்ந்து செல்லும் பிராணிகளின் பார்க்கை (Bali Reptile Park ) ‘ரிம்பா ரெப்டைல் பார்க்’ (Rimba Reptil) என்றும் கூறுகிறார்கள். அது ‘சிங்கபாடுவில்’ (Singapadu) உள்ள ‘பாலி’ பறவைகளின் பார்க்கின் (Bali Bird Park) அருகில்தான் உள்ளது. இந்தப் பார்க்கின் உலகத்தின் மிகச் சிறந்த ஊர்ந்து செல்லும் ஜந்துக்களின் (reptiles) பல வகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தப் பார்க்கைப் பார்த்தால் சீரமைக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ள ஒரு புதைப் பொருள் ஆராய்ச்சி மையத்தின் (archaeological site) இடம் போலத் தோன்றும். ‘இந்தோனேசியாவின்’ மிகச் சிறந்த ‘கொமோடோ’ வகை பறக்கும் ‘நாகங்கள்’ (Komodo Dragaon) , மற்றும் ‘முதலைகள்’ (crocodiles) இங்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கு உலகின் மிகப் பெரிய ‘மலைப்பாம்பு’ மற்றும் 8 மீடர் நீள ‘கார்கண்டுவன்’ பிராணி (gargantuan beast) போன்றவையும் உள்ளன. இங்குள்ள மற்ற பிராணிகளில் ‘உடும்பும்’ (iguana), ‘ராஜ நாகமும்’ (king cobra) உள்ளன. இங்குள்ள பாம்புக் குகையில் (Serpent Cave House) கொடிய விஷத்தன்மைக் (venomous serpents) கொண்ட பாம்புகளும் உள்ளன.
|