படுவன் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
மத்திய பாலியில் உள்ள 'கியான்யர்' (Gianyar) என்ற பகுதியில் உள்ள சிறிய கிராமமே 'படுவன்' (Batuan). இந்த கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு (thousand years) முற்பட்ட மிகச் செழிப்பாக இருந்த இடம்.
தற்போது இங்குள்ள மக்கள் கட்டிடக் கலை, நடனம் மற்றும் வண்ணமயமான ஓவியங்களை (painting, dance and architecture) வரைவதில் வல்லவர்கள். அவர்களுடைய வண்ணப் படங்கள் நம்மை அப்படியே கவர்ந்து இழுக்கும் (mersmerizing) வகையில் அமைந்து உள்ளன.
இந்த 'படுவன்' கிராமத்தின் மிகப் பெரிய ஆலயமான 'புசேஹ்ஹில்' (Pura Puseh) உள்ள சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சுவர் சித்திரங்கள் (intricate stone carvings) அற்புதமானவை. அவற்றை 1992 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பித்தார்கள். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மற்றும் பதினைந்தாம் தேதிகளில் அங்கு நடைபெறும் அந்த கால அரண்மனை நடனமான 'கம்புஹ்' (Gambuh) என்ற நடனம் பார்க்க வேண்டியது, வேறு எங்குமே காண முடியாதது.
Location Map of Batuan
'படுவான்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக் செய்யவும்
 பூர புசேஹ், படுவன் Author: Pravin Premkumar (Creative Commons Attribution 2.0 Generic)
|