படுபுலன் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
மத்திய பாலியில் 'டென்பசாரின்' (Denpasar) வடமேற்குப் பக்கத்தில் உள்ள இன்னொரு கிராமமே 'படுபுலன்' (Batubulan) என்பது . 'படுபுலன்' என்றால் 'சந்திரனின் கல்' (Moon stone) என்று அர்த்தம். இந்த கிராம மக்கள் அற்புதமான பழையகால நாற்காலிகள், மேஜை (antique furnitures) போன்றவை செய்வதிலும் புராண காட்சிகளை (mythological figures) கற்களில் செதுக்குவதில் (stone carving) வல்லவர்கள்.
'படுபுலனில்' உள்ள 'பூர புசேஹ்' (Pura Puseh) என்ற ஆலயம் 'பாலி'யின் நதிக் கரைகளில் கிடைக்கும் (river gorges) இளம் கறுப்பு நிற (Grey) பாறைகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அந்தக் கற்களில் இயற்கையாகவே காணப்படும் சித்திரக் கலை போன்ற தோற்றங்கள் (Paras) அந்த கற்களில் செதுக்கப்படும் சித்திர வேலைபாடுகளுக்கு மேலும் மெறுகூற்றுகின்றன.
 'படுபுலனில்' காணப்படும் செதுக்கப்பட்ட சித்திரங்கள் (18 June, 2004) © Timothy Tye using this photo
'படுபுலனில்' பராங் எனும் நடனமாடும் கலைஞ்சர்கள் உள்ளனர். இந்த ஆலயத்தில் ஒரு வாரம் விட்டு மறுவாரம் இந்த வகை நடன நிகழ்ச்சி நடைபெறுகின்றது. மற்ற வாரங்களின் இறுதியில் அதே நடனம் அந்த கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்திலும் நடைபெறுகின்றது.
Location Map of Batubulan
'படுபுலன்' உள்ள இடத்தின் தரை படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்
|