பெடுகுல் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
வடக்கு மற்றும் மேற்கு பாலியில் மேட்டு நிலப் பகுதியில் உள்ளது 'பெடுகுல்' (Bedugul) என்பது. 'டென்பாசர்' (Denpasar) மற்றும் 'சிங்கராஜா ' (Singaraja) செல்லும் பாதையில் உள்ள இது மலைகள் சூழ 'பிரதான்' ஏரியின் (Lake Bratan) நடுவில் அமைந்து உள்ளது. இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது நல்ல குளுமையாக உள்ளது.
 இக்கா கார்ய பொட்டானிக் கார்டன் , பெடுகுல் Author: Hullie (public domain)
இங்குள்ள முக்கியமான இரண்டு சுற்றுலா இடங்கள் விவசாயிகள் வணங்கும் 'பூர உலுன் தனு பிரதான்' (Pura Ulun Danu Bratan) எனும் ஆலயம் மற்றும் 'இக்கா கார்ய பொட்டானிக் கார்டன்' (Eka Karya Botanic Gardens) என்பவை. இந்த தோட்டத்தில் மருத்துவத்துக்குப் (Herbs) பலனளிக்கும் வகைக்கான 320 க்கும் மேற்பட்ட வகையிலான பூச்செடிக் கொடிகள் உள்ளன. 'பெடுகுல்லில்' விவசாயிகள் பூக்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள்.
Location Map of Bedugul
'பெடுகுல்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|