பெடுலு , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
10 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் ' பிஜெங்' (Pejeng ) ராஜ்யத்தினர் ஆட்சி செய்தபோது செழிப்பாக இருந்த கிராமமே 'பெடிலு' (Bedulu village) என்பது. அதன் தெற்குப் பக்கத்தில் 'யெஹ் புலு' (Yeh Pulu) என்கின்ற நீர்வீழ்ச்சி உள்ளது. 'மஜாபஹிட்' (majaphahit) மன்னர்கள் பாலி மீது படையெடுத்து அதை நெருங்கிய காலமான பதினாலாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய செதுக்கப்பட்டுள்ள (relief carvings) பாறைகள் அங்கு காணப்படுகின்றன. அந்த சித்திர வேலைபாடுகள் 80 அடிக்கு 6 அடி அளவில் காணப் படுகின்றன. அது 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'கிபோ லு' (Kebo Iwo) என்பவற்றின் ஒரு புராணக் கதையின் (legend) அடிப்படையில் எதோ ஒருவரால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
'பெடுலுவில்' இரண்டு ஆலயங்கள் பார்க்க வேண்டியவை. முதலாவது 'பூர பெங்கஸ்துலன்' (Pura Pengastulan). மிகப் பெரிய இந்த ஆலயத்தின் கதவுகள் தற்காலத்திய அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளன. அதை 'பெடுலுவில்' பிறந்த குஸ்தி ந்யோமன் லெம்பட் (Gusti Nyoman Lempad) என்பவர் வடிவமைத்து உள்ளார். இரண்டாவது 'மூன்று ஆலயங்களின் சங்கமம்' (Temple of the Meeting of Three) என்ற அர்த்தம் தரும் பெயரான 'பூர சமுவன் திக' (Pura Samuan Tiga) என்பது. மூன்று பிரிவுகளை சேர்ந்த கடவுட்கள் அந்த ஆலய இடத்தில்தான் கூடி ஒன்றிணைந்து 'மயடானவா' (Mayadanawa ) என்ற அசுர மன்னனை (demon king) அழித்தார்களாம்.
பாலி நாள்காட்டியின்படி (காலண்டர்) மார்ச்- ஏப்ரல் மாதத்தில் வரும் 'பூரணமா கேதாஸ்' (Purnama Kedas) பண்டிகையில் இங்கு அமர்களமாக விழா நடைபெறுகின்றது.
Location Map of Bedulu
'பெடுலு' உள்ள இடத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|