பெசாக்கியா, பாலி
(Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா )
‘பெசாக்கியா’ அல்லது ‘பூரா பெசாக்கியா’ என்பது பாலி ஆலயங்களின் தாய் ஆலயம். இது கிழக்கு பாலியில் ‘குனுங் ஆகுங்’ ( Gunung Agung ) எனும் சரிவுப் பகுதியில் உள்ளது. பாலி இந்துக்களின் மிகப் போற்றுதலுக்குறிய புனித ஆலயம் இது.
 காலையில் பூரா பெசாக்கியாவின் தோற்றம் Author: Flying Pharmacist (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
‘பெசாக்கியா’ பதினாலாம் நூற்றாண்டை (14th century) சேர்ந்தது. ஜாவா தீவின் வழியாக அப்போதுதான் பாலியில் இந்து மதம் தழைக்கத் துவங்கி உள்நாட்டுக் கலாச்சாரத்துடன் இணைந்து கொண்டது.
இந்த ஆலய வளாகத்துக்குள் இருபத்தி இரண்டு (twenty-two) தனி ஆலயங்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக உள்ளன. ஒவ்வொன்றின் உள்ளும் தாழ்வாரங்களும் பல வெளியேறும் கதவுகளும் உள்ளன. அங்கிருந்து மூல ஆலயமான 'பூரா பெனந்தாரன் ஆகுங்' (Pura Penataran Agung) செல்லும் வகையில் அவை அமைக்கப்பட்டு உள்ளன. மலை மீது அனைத்துக் கடவுட்களும் குடி கொண்டு உள்ளனர் என்ற நம்பிக்கைக் கொண்டு அங்கு செல்ல ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
 பூரா பெசாக்கியா ஆலய வளாகம் Author: Sean McGrath (Creative Commons Attribution 2.0 Generic)
'பூரா பெனந்தாரன் ஆகுங்' கின் பத்மாசன அல்லது தாமரை மலர் சிம்மாசனமே ( lotus throne) அந்த ஆலயத்தின் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
1963 ஆம் ஆண்டு 'குனுங் அகுங்' எரிமலை தீயை (-eruption -) கக்கியபோது 1700 மக்கள் பலியானார்கள் என்றாலும் இந்த ஆலயம் தப்பியது. அந்த எரிமலை சம்பவத்தைப் பற்றிக் கூறும்போது கடவுட்களின் கோபம் காரணமாக அது ஏற்பட்டது எனவும் தமது சக்தியை அதன் மூலம் கடவுட்கள் காட்டினாலும் பக்தர்களின் நம்பிக்கையை குலைக்கக் கூடாது என்பதினால் ஆலயத்தை விட்டு வைத்தனர் எனவும் நம்புகிறார்கள். 210 நாட்களைக் கொண்ட பாலியின் நாள்காட்டியின்படி ஒவ்வொரு வருடமும் அங்குள்ள ஒவ்வொரு ஆலயமும் விழா கொண்டாடுகின்றன. வருடத்தில் சுமார் எழுபது விழாக்கள் ( seventy festivals) அங்கு நடைபெறுகின்றன.
Location Map of Besakih
Click here to view the Google Map to Besakih.
|
|
|