ப்லாபடு , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
மத்திய பாலியின் கியன்யாரில் உள்ளது 'ப்லாபடு' (Blahbatu) எனும் கிராமம்.1990 ஆம் ஆண்டு இங்கு அமைக்கப்பட்டு உள்ள மிகப் பெரிய அளவிலான கிராமிய குழந்தை தேவதை 'கேபு லோவிற்குப்' (Kebo Iwo) பெயர் போனது.
தமது குழந்தைகள் இறப்பதற்குக் காரணம் 'கேபு லோவே' என இந்த கிராமத்தின் அருகில் இருந்த ஊர் பெண்கள் நினைத்ததினால் அந்த குழந்தை தேவதையை திருப்திப்படுத்த இந்த கிராமத்தில் 'கேபு லோவிற்குப்' சிலை வைக்கப்பட்டது என்று கதை உள்ளது .
மேலும் இந்த கிராமத்தில் புத்த மற்றும் இந்து மத கலாசாரத்தை தழுவி 'விஹாரா அமுர்வ பூமி ப்லபடு' (Vihara Amurva Bhumi Blahbatu) என்ற சீனர்களின் வழிபாட்டு ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது. 1999 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் பாலியின் சீனர்களின் வழிபாட்டுத் தளமாக உள்ளது.
இந்த கிராமத்தில் தட்டினால் இனிய ஒலி எழுப்பும் பாலனியர்களின் புகழ்பெற்ற ஜாலரா (Balinese gongs) வாத்தியம் செய்யும் தொழில்சாலை உள்ளது.
'ப்லாபடு' கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீடர் தொலைவில் உள்ளது 'குத்ரீ' (Kutri) எனும் மற்றொரு கிராமம். இந்த கிராமத்தில் 'பூர புகிட் தர்ம குத்ரீ' (Pura Bukit Dharma Kutri) எனும் துர்க்கை ஆலயம் உள்ளது. அதில் துர்க்கையின் சிலை (goddess Durga) ஒரு மாட்டை (Bull) கொல்லும் காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலை 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள்.
Location Map of Blahbatu
'ப்லாபடு' உள்ள இடத்தின் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|