கண்டி தசா , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கிழக்கு பாலி'யில் உள்ளது 'கண்டி தசா' (Candi Dasa) எனும் கடற்கரையில் அமைந்து உள்ள நகரம் (beach resort) . இங்கு யாத்ரிகர்கள் வந்து ஓய்வு எடுப்பார்கள். 'கண்டி தசா' என்பது 'நுசா துவாவை' (Nusa Dua) விட அதிக இயற்கை காட்சிகளைக் கொண்டது. 'குடா'விற்குப் (Kuta) மாற்றாகவே இது அமைந்து உள்ளது .
 கண்டி தசாவின் ஒரு தோற்றம் Author: っ (Creative Commons Attribution 3.0 Unported)
முதலில் இந்த இடம் மீன் பிடிக்கும் (Fishing place) இடமாகவே இருந்தது. அதன் பின்னரே இதை சுற்றுலாப் பயணிகளின் இடமாக மாற்றினார்கள். இங்கு நீச்சலடிக்க நல்ல இடங்கள் உள்ளன. மேலும் இங்கு தாங்கும் பல நல்ல ஹோட்டல்களும் விடுதிகளும் உள்ளன.
'கண்டி தசாவின்' விசேஷமான உணவு நல்ல சதைப்பற்றான வாத்தை (succulent duck ) பயன்படுத்தி மூலிகைப் பொடிகள் மற்றும் மசாலாவகைகள் (herbs and spices) போடப்பட்டு தயாரிக்கப்படுகின்றது.
'கண்டி தசாவின்' எதிரில் 'பூர சண்டி தசா' (Pura chandi dasa) எனும் ஆலயம் உள்ளது. அங்கு சென்றால் குழந்தைப் பேறு கிடைக்குமாம். அங்கிருந்து இன்னும் இரண்டு கிலோ தொலைவு தள்ளி 'பூர கோமங்' (Pura gomang) என்ற ஆலயமும் உள்ளது.
Location Map of Candi Dasa
இந்த இடம் உள்ள தரைப் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|