Celuk, Bali
மத்திய பாலியில் உள்ள இன்னொரு இடம் 'செலுக்' (Celuk) என்ற கிராமம் . பாலியில் விற்கப்படும் அதிக வெள்ளி மற்றும் தங்க நகைகள் (gold and silversmithing) இந்த கிராமத்தில்தான் செய்யப்படுகின்றன. இங்குள்ள 'பண்டே மஸ்' (Pande Mas) என்ற இனத்தவர் நகைகள் செய்யும் தொழிலில் திறமை பெற்றவர்கள்.
இந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் சிறியதும் பெரியதுமான பல நகைக் கடைகள் உள்ளன. மேலும் பழைய கால தோற்றம் முதன் நவீனத் தோற்றம் தரும் வகைகளிலான நகைகள் இங்கு செய்யப்படுகின்றன. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்படும் நகைகளில் 30 முதல் 40 சதவிகித (30 to 40 % commission) பங்கு அங்கு உங்களை அழைத்துச் செல்பவர்களுக்கு உங்களுக்குத் தெரியாமல் தரப்படுகின்றது என்பதினால் அந்த நகையின் உண்மையான விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Location Map of Celuk
'செலுக்' உள்ள பகுதியைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|
|