கியான்யர் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
மத்திய பாலியின் மாவட்ட ஆட்சியின் மையமே (administrative center) கியான்யார் (Gianyar). மற்ற கிராமங்களைப் போல சுற்றுலா இடம் அற்ற இந்த கிராமத்துக்குதான் மற்ற இடங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து தமக்குத் தேவையான பல விதமான பொருட்களையும் வாங்கிச் செல்வார்கள். அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் இல்லாமல் விழாக்கள், பண்டிகைகள் (religious ceremonies) போன்ற நாட்களிலும் இங்குதான் மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
 கியான்யர் Author: 㣠(Creative Commons Attribution 3.0 Unported)
கியான்யரில் கைவேலை செய்த துணிமணிகள், நகைகள் போன்றவையும் கிடைக்கின்றன. இங்குள்ள சமுதாயக் கூடத்தின் அருகில் உள்ள உணவகத்தில் வறுத்த பன்றி இறைச்சி மற்றும் பிற வகைகளிலான இறைச்சிகள் கிடைக்கின்றன.
புரி கியான்யார் என்பது (Puri Gianyar) புனித இடம். இது இந்த கிராமத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதற்குள் செல்ல யாவரையும் அனுமதிப்பது இல்லை. ஆகவே அதன் வெளியில் நின்று கொண்டுதான் உள்ளே உள்ளதைக் காண முடியும். 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த புனித இடம் (noble house) 1917 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் (earthquake) அழிந்துவிட்டதினால் அது போன்ற மாற்று இடத்தை மீண்டும் கட்டி உள்ளார்கள்.
கியான்யாரின் தென்மேற்குப் பகுதியில் மூன்று கிலோ தொலைவில் உள்ளது போனா (Bona) என்ற கிராமம். இந்த கிராம மக்கள் கைவேலை செய்த துணிமணிகளை செய்வதில் திறமையானவர்கள். அதுபோல போனாவின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு கிலோ தொலைவில் உள்ள கிராமமான ப்லேகா (Blega) என்பது மூங்கிலில் ஆன நாற்காலி மற்றும் மேஜை செய்யும் தொழிலில் வல்லவர்கள்.
Location Map of Gianyar
கியான்யர் உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|