கிலிமனுக், வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கிலிமனுக்' (Gilimanuk) என்பது படகுகள் வாடகைக்குக் கிடைக்கும் இடம். இங்கிருந்து ஜாவாவுக்குச் செல்லப் படகுகள் (ferry port) வாடகைக்குக் கிடைக்கும். இந்தப் பகுதியில் நிறைய நடமாடும் உணவகங்கள் (open-air eateries) உள்ளன. அதில் படகுகளில் செல்பவர்கள் படகிற்காக காத்திருக்கும்போதே உணவு அருந்துகிறார்கள். அங்கு உள்ள வரவேற்பு வளைவு அற்புதமான (elaborately ornate arch) வேலைபாடுகளுடன் அமைந்து உள்ளது.
'கிலிமனுக்கின்' வடக்கில் உள்ளது 'சிக்கிக்' (Cekik) எனும் கிராமம். அங்கு 'புருபகாலா' (Museum Purbakala) எனும் ஒரு கலைக் காட்சியகம் உள்ளது.
இதில் கற்கால மனிதர்கள் (neolithic tools) பயன்படுத்திய கல் ஆயுதங்களும் அவர்கள் பயன்படுத்திய இடுகாட்டுப் பொருட்களும் காட்சியாக வைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் அந்த இடத்தில் வாழ்ந்து இருந்த கற்கால மனிதர்களைப் பற்றிய விவரம் கிடைத்து உள்ளது. 'சிக்கிக்'கில் 'தமன் நசியோனால் பாலி பரத்' (Taman Nasional Bali Barat) என்பதின் தலைமை நிலையமும் உள்ளது.
Location Map of Gilimanuk
‘கிலிமனுக்கின்’ இருப்பிடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|