கோவா லவாஹ், கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கோவா லவாஹ்' (Goa Lawah) என்பது பாலியில் உள்ள ஒரு வவ்வால் குகை ஆலயம். 'க்லுங்குங்' (Klungkung) என்ற மன்னர்கள் வசித்தப் பகுதியில் உள்ள இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. இதற்குள் ஆயிரக் கணக்கில் வவ்வால்கள் (bats) உள்ளன. ஒரு புராணக் கதையின்படி இந்த குகை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதாவது 'பெஸகிஹ்' (Besakih) என்ற பகுதிவரை நீண்டு உள்ளதாம். மேலும் இதன் உள்ளே மிகப் பெரிய ராஷச பாம்பு (dragon-like snake) உள்ளதாகவும் அது அந்த வவ்வால்களை சாப்பிடுவதாகவும் நம்பப்படுகின்றது.
 கோவா லவாஹ்ஹில் ஆலய விழா Author: Eric Bajart (Creative Commons Attribution 3.0 Unported)
அந்த குகைக்கு வெளியில் இருந்து கடலின் அழகை ரசிக்கலாம். வானம் நல்ல தெளிவாக இருக்கும்போது அங்கிருந்து 'நுசா பெனிடா' (Nusa Penida) மற்றும் 'லோம்போக்' (Lombok) போன்ற இடங்களையும் பார்க்க முடியும்.
'கோவா லவாஹ்ஹில்' இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது 'குசம்பா' (Kusamba) என்ற இடம். அங்கு உள்ள கடற்கரை கருப்பு நிறத்தில் (black sand beach) உள்ளது. இந்த கிராமத்தில் மீன் பிடிக்கும் தொழில் நடைபெறுகின்றது. அங்கு வாடகைப் படகுகள் அந்தக் கடலை சுற்றிப் பார்க்க கிடைக்கின்றன.
Location Map of Goa Lawah
'கோவா லாவாக்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|