குனுங் ஆகுங் , கிழக்கு பாலி
 Gunung Agung Author: Maciej Kosicki (Creative Commons Attribution 3.0 Unported)
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'குனுங் ஆகுங்' (Gunung Agung) என்பது பாலியில் உள்ள மிக உயரமான எரிமலை(volcano ). அது கடல் மட்டத்தில் இருந்து 3142 மீட்டர் உயரத்தில் உள்ளது. பாலியைப் பொறுத்தவரை இந்த மலை ஹிந்துக்கள் மிக முக்கியமாகக் கருதும் 'மேரு' (Meru) மலைக்கு ஈடானது . இதன் மீதுதான் புனித 'பூர பெஸைஹ்' (Pura Besakih) ஆலயம் உள்ளது.
இந்த மலை 1964 ஆம் ஆண்டு தீப்பிழம்பைக் கக்கியது. இப்போதும் அதில் இருந்து புகையும், சாம்பலும் (smoke and ash) வெளிவருகின்றது. உள்ளது.
 குனுங் ஆகுங் மலை உச்சியின் தோற்றம் Author: Mrllmrll (public domain)
இந்த மலை மீது ஏறிப் போக முடியும். ஆனால் புனித ஆலயம் உள்ள அங்கு செல்ல வேண்டும் எனில் ஆலயத்தின் முறைப்படியான ஆடைகளையே (temple dress code) உடுத்த வேண்டும். அதன் மீது ஏறிச் செல்ல மழைக் காலமான அக்டோபர் முதல் மே மாதம்வரை (Oct-May) சரியான காலமாகும். அங்கு செல்பவர்கள் முதலில் வரும் 'பூர பசார் ஆகுங்' (Pura Pasar Agung) ஆலயத்தில் தரிசனம் செய்தப் பின்னரே ஆறு கிலோ உயரத்தில் உள்ள 'பெஸகிஹ்' (Besakih temple) ஆலயத்தை அடைய முடியும். அதற்கு சுமார் மூன்று மணி நேரம் பிடிக்கும்.
Location Map of Gunung Agung
குனுங் ஆகுங் ஆலயம் உள்ள தரைப் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|