குனுங் படுகவு , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியில் உள்ள இரண்டாவது உயர்வான மலை சிகரமே 'குனுங் படுகவு' (Gunung Batukau) என்பது. 2276 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த எரிமலை ‘பதுக்கல்’ எரிமலைப் பகுதியில் உள்ள உயரமான மலை. இதை 'குனுங் படுகாரு' (Gunung Batukaru) என்றும் கூறுகிறார்கள்.
அந்த மலைப் பகுதியில் 'பூர லுஹூர் படுகவு' என்ற பெயரில் ஒரு ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு பாலியர்கள் 'குனுங் அகுங்குடன்' (Gunung Agung) 'குனுங் படுகவு'வையும் (Gunung Batukau) சேர்த்து வணங்குகிறார்கள். அங்குள்ள மிக உயரமான மலைகளுக்கு இடையில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்துக்கு உள்ளே உள்ள தெய்வத்தை 'சங் ஹயாங் டேனிவு' (Sang Hyang Temuwuh) என அழைக்கின்றார்கள். அந்த ஆலய வளாகத்துக்குள் ஒரு குளமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் நடுவில் உள்ள சன்னதி 'குனுங் படுகவு' மற்றும் அருகில் உள்ள ஏரியின் கடவுளான 'தம்ப்லிங்கனுக்கும்' (Lake Tamblingan) அற்பணிக்கப்பட்டு உள்ளது.
'பூர லுஹூர் படுகாவு'வில் இருந்து கிழக்கு நோக்கி 'படுரிடி' (Baturiti) என்ற இடத்தைக் நோக்கிச் சென்றால் 'ஜதுலிவிஹ்' (Jatiluwih) என்ற பகுதியில் பல அரிசி நிலங்கள் பச்சை பசேல் எனத் தெரியும்.
Location Map of Gunung Batukau
‘குனுங் படுகவு’ உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|