குனுங் கவி மன்னர் நினைவுச் சின்னங்கள், பாலி

'பக்ரிசன்' (Pakrisan River) எனும் நதிக் கரையைத் தொட்டபடி உள்ள 'தம்பக்சிரிங்' (Tampaksiring) என்ற இடத்தின் அருகில் உள்ளது 'குனுங் கவி' மன்னனின் நினைவுச் சின்னங்கள் (gunung-kawi-royal-monuments) . இயற்கையாக மூடிய பெரிய தாழ்வாரம் போன்று அமைந்து உள்ள பாறை இடுக்குகளில் வடிவமைக்கப்பட்டு உள்ளதே 'குனுங் கவி' மன்னனின் ஆலயங்கள். ஆலயங்களைப் போன்று காட்சி தரும் ஒன்பது நினைவுச் சின்னங்கள் அங்குள்ள பாறை இடுக்குக்களில் செதுக்கப்பட்டு உள்ளன.
இந்த நினைவுச் சின்னங்கள் பதினோராம் நூற்றாண்டை (11th century) சேர்ந்த மன்னனான 'அனக் வுங்சு' (king Anak Wungsu) மற்றும் அவருடைய மனைவிகளுக்காக அமைக்கப்பட்டது. இந்த முக்கியமான இடத்தைத் தவிர கன்னியர் மாடம் போன்ற இரண்டாவது நிலை சின்னங்கள் (Second Cloisters) தெற்கு நதிக் கரையிலும், மூன்றாவது நிலை சின்னங்கள் (Third Cloisters) நதிக் கரையின் கிழக்குப் பகுதியிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் அந்த மன்னனின் மனைவிகள் மற்றும் சந்ததியினருக்காக அமைக்கப்பட்டு உள்ளனவாம். அருகில் அரிசி பயிரிடப்பட்டு உள்ள விவசாய நிலங்களைத் தாண்டி பத்தாவது கல்லறை (Tomb) என அழைக்கப்படும் நினைவுச் சின்னம் உள்ளது.
 குனுங் கவி மன்னர் நினைவுச் சின்ன ஆலயங்கள் Author: Bernard Gagnon (Creative Commons Attribution 3.0 Unported)
|