குனுங் லேம்புயாங் , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'குனுங் லேம்புயாங்' (Gunung Lempuyang) என்பது கிழக்கு பாலியின் 1000 மீட்டர் உயரமான மலை. அதன் மீது உள்ளது 'பூர லேம்புயாங் லுஹூர்' (Pura Lempuyang Luhur) என்ற ஆலயம். அங்கு நடக்கும் விழாக் காலங்களில் அதைக் காணுவது சிறப்பாக இருக்கும்.
அந்த ஆலயத்துக்குச் செல்லும் பாதையே அற்புதமாக இருக்கும். 'தீர்த்தகங்கா' (Tirtagangga) எனும் பகுதியில் இருந்து அந்த ஆலயத்தை நோக்கியப் பாதையில் செல்லும்போது ஒரு புறம் 'குனுங் லேம்புயாங்' தெரிய மற்றொருபுறம் 'குனுங் ஆகுங்' (Gunung Agung) தெரியும். வழி முழுவதும் விவசாய நிலங்களில் அரிசி பயிரிடப்பட்டு உள்ளதைக் காணலாம்.
Location Map of Gunung Lempuyang
'குனுங் லேம்புயாங்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|