ஜாகராகா , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'ஜாகராகா' (Jagaraga) என்பது வடக்கு பாலியில் உள்ள சிறு கிராமம். 1849 ஆம் ஆண்டு பாலியர்கள் (Balinese ) மற்றும் 'டச்' (Dutch) படையினருக்கும் நடந்த கடும் போரில் இங்கு ஆண்ட 'பதிஹ் ஜலந்திக்' (Patih Jelantik) என்ற உள்ளூர் மன்னனை 'டச்' அரசினரால் எளிதில் வெல்ல முடியாமல் போனாலும் முடிவாக அந்த மன்னன் தோற்றுப் போனான். அவர் இந்த ஊர் மக்களின் நினைவில் ஒரு மாவீரராகக் (hero) காட்சி தருகிறார்.
இந்த கிராமத்தில் உள்ள 'பூர டேலம்' (Pura Dalem) எனும் ஆலயத்தின் கட்டுமானங்கள் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'டச்' மற்றும் பாலியர்களின் கலைகள் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
'ஜாகராகா' வில் இருந்து நாலு கிலோ தொலைவில் உள்ளது 'சங்சிட்' (Sangsit) எனும் கிராமம். அங்குள்ள 'பூர பிஜி' (Pura Beji) என்ற ஆலயம் கருடனின் (Garuda birds) புராணக் கதையை மையமாகக் கொண்டவாறு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் தீய புத்தி (evil people) உள்ளவனுக்கு கிடைக்கும் கொடூரமாக (hell) கிடைக்கும் தண்டனைகளை சித்தரித்துக் காட்டி உள்ளனர்.
'ஜாகராகா' வில் இருந்து தெற்குப் புறத்தில் நாலு கிலோ தொலைவில் உள்ள 'சாவான்' (Sawan) எனும் கிராமத்தில் மிகச் சிறந்த அரிசி உணவு கிடைக்கும். மேலும் அங்குள்ள மலைப் பள்ளத்தாக்கில் ஓடும் அருவி (river gorge) பார்க்க வேண்டிய இடம் ஆகும். அங்கு நடக்கும் பண்டை காலத்தைய நடனமும் பிரபலமானது.
'சங்சிட்டில்' இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நல்ல தங்கும் வசதி கொண்ட தங்குமிடம் உள்ளது.
Location Map of Jagaraga
'ஜாகராகா' உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
View Larger Map
|
|
|