கபால் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'டென்பாசரின்' (Denpasar) வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது 'கபால்' (Kapal) எனும் இடம். இந்த கிராமம் அமைதியானது. இங்கு உள்ள மக்கள் வீட்டு பூஜை அறைகளை (household shrines) செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். அப்படிப்பட்ட கடைகள் ஒரு வீதி முழுவதும் உள்ளன.
இங்குள்ள 'பலின்கிஹ்' (palinggih) என்ற ஆலயம் உள்ளூர் மக்களின் கடவுளைக் கொண்டது. அது சிறிய குடுசைப் போல தோற்றம் தரும் வகையில் அமைந்து உள்ளது. அதன் மீது அமைந்துள்ள இசுக் (ijuk) எனப்படும் கரிய நிறக் கூரை, தலை முடியை (human hair) பிரதிபலிக்கின்றதாம்.
 வீட்டில் பயன் படுத்தப்படும் பூஜை அறைகளை செய்து விற்பனைக்கு
வைக்கப்பட்டு உள்ள இடம் (19 June, 2004) © Timothy Tye using this photo
'கபாலில்' உள்ள 'பூர சடா' (Pura Sada) எனும் ஆலயம் பற்றி தனியாக எழுதி உள்ளேன்.
Location Map of Kapal
கபால் உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|