க்ராம்பிடான், வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியின் 'தபனான்' (Tabanan regency) ராஜ்ய பகுதியில் உள்ளது 'க்ராம்பிடான்' (Kerambitan) எனும் கிராமம். 20 ஆம் நூற்றண்டின் ராஜ்யப் பகுதியாக இருந்த இந்த கிராமம் இன்றும் அந்த ராஜ்யத்தின் சுவடுகள் உள்ளன. முன்னர் இருந்த மாளிகைகளான 'க்ராம்பிடான்', 'புரி அனார்' (Puri Anyar) மற்றும் 'புரி அகுங் விசடா' (Puri Agung Wisata) போன்றவை இன்று தங்கும் இடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. 'க்ராம்பிடானில்' பண்டைய பாலியினரின் நடன நிகழ்ச்சிகள் 'தக்டேகான்' (Tektekan) எனும் இசை வாத்தியங்களை பயன்படுத்தி நடைபெறுகின்றன. 'தக்டேகான்' வாத்தியக் கருவிகளில் ஜிங்ஜிங் என ஒலிக்கும் ‘தபலா’, மணி மற்றும் மூங்கிலினால் ஆன மத்தளத் தடி போன்றவை உள்ளன.
‘க்ராம்பிடான்’ கிராமத்தில் இருந்து கடல்கரை ஆறு கிலோ தொலைவில் உள்ளது. அங்கு பல தங்கும் இடங்கள் உள்ளன.
Location Map of Krambitan
‘க்ராம்பிடான்’ உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக் செய்யவும்.
|