பிரதான், வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
வடக்கு மற்றும் மேற்கு பாலியின் 'பெடுகில்' மலைப் பிரதேசத்தில் உள்ள பகுதியில் உள்ளதே 'பிரதான்' (Bratan) என்ற ஏரி. அற்புதமான இயற்கை அழகுகள் கொண்ட இடம் அது. அதை சுற்றி ‘குனுங் புன்கக் மன்ங்கு’ (Gunung Puncak Manggu), 'குனுங் கடூர்' (Gunung Catur) போன்ற உயரமான மலைகள் உள்ளன. அதை சுற்றி உள்ள இடங்களில் பெரும்பாலும் விவசாயிகளே வசிக்கின்றார்கள். ஆனால் தற்போது அங்கு கேளிக்கைகளுடன் கூடிய பல தங்கும் இடங்கள் அமைந்து உள்ளன.
அந்த ஏரியின் அருகில் 'பூர உலுன் தனு பிரதான்' (Pura Ulun Danu Bratan) என்ற ஆலயம் உள்ளது.
 பிரதான் ஏரி (19 June, 2004) © Timothy Tye using this photo
இந்த ஏரியின் வடக்குப் பகுதியில் 'பாலி ஹன்டாரா கொசைடோ கண்ட்ரி கிளப்' (Bali Handara Kosaido Country Club) என்பது உள்ளது. அங்குதான் உலகிலேயே மிகப் பெரிய கோல்ப் (golf ) விளையாட்டு கற்றுத் தரப்படும் இடம் உள்ளது.
மேலும் பிரதான் ஏரியின் அருகில் 155 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாவரப் பார்க்கில் 350 க்கும் மேற்பட்ட செடிகொடிகள், அவற்றில் பல மருத்துவ குணம் கொண்டவை உள்ளன.
Location Map of Lake Bratan
‘பிரதான்’ ஏரி உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக்செய்யவும்.
|