புயான் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'புயான் ' ஏரி (Lake Buyan) என்பது வடக்கு மற்றும் மேற்கு பாலியின் முக்கியமான ஏரியாகும். இதை 'தனுவு புயான்' (Danau Buyan) என்றும் கூறுகிறார்கள். 'பிரதான்' ஏரியில் (Lake Bratan) இருந்து 15 நிமிடங்களில் இந்த ஏரியை அடையலாம். இது 'பெடுகுல்' பள்ளத்தாக்கில் 'தம்பலிங்கன்' ஏரிக்கு (Lake Tamblingan) அருகில் உள்ளது.
 புயான் ஏரி Author: 㣠(Creative Commons Attribution 3.0 Unported)
இந்த ஏரியில் நிறைய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு உள்ளதைக் காணலாம். ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஏரியில் சுற்றலாம். 'குனுங் லேசாங்' (Gunung Lesong) பள்ளங்களில் உள்ள குகைகளையும் நீங்கள் அப்போது கண்டு ரசிக்கலாம்.
Location Map of Lake Buyan
'புயான் ஏரி'கிளிக் உள்ள தரைப் படத்தைக் காண இங்கே செய்யவும்.
|
|
|