லோவினா , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
வடக்கு பாலியில் உள்ள சுற்றுலாத் தளம் 'லோவினா' (Lovina). 'சிங்கராஜா' (Singaraja) முதல் 'புலேலுங்க்' (Buleleng) வரை பரவி உள்ள இந்த கடலின் நீளம் சுமார் 15 கிலோ மீட்டர் ஆகும்.
இந்த 'லோவினா' கடல் பகுதியில் உள்ள சில கிராமங்கள் 'கலியசெம்' (Kaliasem) , 'துகட்முங்கா' (Tukadmungga) போன்றவை. கடற்கரை முழுவதும் கருப்பு மணலும் தேங்காய் மரங்களும் உள்ளன. இந்தக் கடலில் டால்பின் (dolphin) மீன்களையும் காணலாம்.
 லோவினா கடற்கரை Author: っ (Creative Commons Attribution 3.0 Unported)
‘லோவினா’ என்ற சொல் ‘புலேளுங்கின்’ சிற்றரசராக இருந்த ‘பண்டசி திசனா’ (Pandji Tisna) என்பவரின் வீடான 'லூவ் இந்தோனேசியா' (Luv Indonesia) என்பதில் இருந்து வந்ததாம் . 1950 ஆம் ஆண்டில் அவர்தான் பாலியின் சுற்றுலா பயணத்தை துவக்கியவராம். இங்கு வந்து நீங்கள் நல்ல ஓய்வு எடுக்கலாம். அருகில் உள்ள 'திமுகஸ்' (Temukus) என்ற கிராமத்தில் நீர் வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.
Location Map of Lovina
‘லோவினா’ உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக்செய்யவும்.
|