மகம் -ஜெயப்ரானா , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
மேற்கு பாலியின் 'தெலுக் டேரிமாவில்' (Teluk Terima) உள்ளது 'மகம் ஜெயப்ரானா' (Makam Jayaprana) என்ற கல்லறைக் கட்டிடம் . ஒரு மலை உச்சியின் மீது உள்ள இதை சுற்றிலும் பல இயற்கை காட்சிகளைக் கொண்டு அமைந்து உள்ளது. அங்கிருந்துப் பார்த்தால் 'மென்ஜங்கன் தீவு' (Menjangan Island), 'கில்மானுக்' (Gilimanuk) மற்றும் ஜாவாவின் 'குனுங் ரவுங்' (Gunung Raung) போன்ற இடங்களையும் காணலாம்.
'மகம் ஜெயப்ரானா' என்பது உள்ளூர் மாவீரனான 'I ன்யோமான் ஜெயப்பிரானா' (I Nyoman Jayaprana) என்பவரின் கல்லறை. ஆனால் அவர் உண்மையான கதாநாயகரா அல்லது கட்டுக் கதையா என்பது தெரியவில்லை.
அங்கு நிலவும் கிராமியக் கதையின்படி 'ஜெயபிரானா' உள்ளூரில் இருந்த மிக அழகான 'லயோன்சாரி' (Layonsari) என்றப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருந்தார். ஆனால் அந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னரான 'கலியாங்கேட்' (Lord Kalianget) என்பவர் அவளை தனக்கு மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தார். ஆகவே அவர் அதற்கு ஒரு சதித் திட்டம் தீட்டினார். 'புகியை' (Bugis) சேர்ந்த 'கடற்கொள்ளையர்கள்' (Pirates) அந்த நாட்டின் மீது படை எடுத்து வந்தனர். ஆகவே அவர்களை துரத்தியடிக்க தனது படை வீரர்களுடன் 'ஜெயபிரானா'வையும் மன்னர் 'கலியாங்கேட்' அனுப்பினார். தனது படைவீரர்களிடம் அந்த சண்டையின்போது யாருக்கும் தெரியாமல் 'ஜெயபிரானா'வைக் கொன்று விடுமாறு கூறி இருந்தார். ஆனால் அந்த சதித் திட்டத்தைக் கேள்விப்பட்ட 'லயோன்சாரி' தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டு தனது காதலருடன் ஒன்று சேர்ந்தாள்.
அதனால்தான் 'ஜெயபிரானா' மற்றும் 'லயோன்சாரி' க்கு அந்த மலை உச்சியில் கல்லறைக் கட்டினார்கள்.
Location Map of Makam Jayaprana
‘மகம் –ஜெயப்ரானா’ உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
View Makam Jayaprana in a larger map
|