மார்கா, வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியின் மீது படை எடுத்து வந்த 'டச்' (Dutch) மற்றும் பாலியினர் இடையே கடுமையான சண்டை 'மார்கரானா' (Margarana) என்ற இடத்தில் நடந்தது. இந்த இடத்தில்தான் உள்ளூரில் இருந்த வீரரான 'I குஸ்தி நுராஹ் ராய்' (I Gusti Ngurah Rai) என்பவர் கடைசி வரை தனது படையினருடன் சேர்ந்து 'டச்' அரசுப் படைகளுடன் சண்டைப் போட்டு உயிர் துறந்தார்.
ஆகவே அந்த இடத்தில் அவருக்கும் மற்றும் உயிர் இழந்த 94 பேர்களுக்கும் சேர்த்து நினைவகம் போல கல்லறை (memorial cemetery) கட்டப்பட்டது. ஒவ்வொன்றும் சிறிய அளவிலான மேரு மலைப் போன்ற ஆலயத் (miniature meru shrine) தோற்றத்தில் கட்டப்பட்டு உள்ளன. அதைத் தவிர அந்தப் போரில் உயிர் துறந்த 1372 பேர்களுக்கும் நினைவகம் (monument) கட்டப்பட்டது. அது 1945 ஆம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதியைக் குறிக்கின்றது. அதில் உள்ள நான்கு படிகள் மற்றும் ஐந்து தூண்கள் 45 ஆம் ஆண்டை பிரதிபலிக்கின்றது. அதில் உள்ள எட்டு அடுக்கில் அமைந்து உள்ள நினைவகங்கள் (eight tiers of the monument) ஆகஸ்ட் மாதத்தையும், அதன் உயரமான (height ) 17 மீட்டர் 17 ஆம் தேதியையும் குறிக்கின்றன.
Location Map of Marga
'மார்கரானா' உள்ள இடத்தின் தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக்செய்யவும்.
|