மாஸ், மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கியன்யார்' (Gianyar regency)அரச பிரதிநிதிகளின் வாசஸ்தல பகுதியில் உள்ளது 'மாஸ்' (Mas) எனும் கிராமம். இங்கு மரவேலைபாடுகளும் 'டோபெங்' எனப்படும் (topeng) முகமூடிகள் (mask) செய்யும் தொழிலும் பிரசித்தி பெற்றது. வம்சாவளியாக வரும் அங்குள்ள கலைஞ்சர்கள் அவற்றை பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறார்கள்.
'பூர தமன் புலே' (Pura Taman Pule) எனும் ஆலயமும் இங்குள்ளது. இது 'மஜாப்ஹிட்' (Majapahit) எனும் பண்டிதரின் பெருமைக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் விழாவின்போது மரவேலையில் கைதேர்ந்த பிராமணர்கள் பாலியின் பல இடங்களில் இருந்தும் இங்கு வந்து தமது முன்னோரான 'நிரார்த்த' (Nirartha) என்பவரை கவுரவிக்கின்றார்கள். இந்த ஆலயத்தில் உள்ள மரம் மிகவும் புனிதமானது (sacred) எனக் கருதப்படுவதினால் விழாவின்போது அதை பல்வேறு வண்ண துணிகளால் அலங்கரிக்கின்றார்கள்.
அந்த விழாக் காலத்தில் அங்கு செல்லும் யாத்ரிகர்கள் அங்கு நடைபெறும் 'வயாங் வாங்' (wayang wong) எனும் கலை நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம்.
Location Map of Mas
'மாஸ்' என்ற இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|