மெடிவி, வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'மெடிவி' (Medewi ) கடற்கரை மேற்கு பாலியில் உள்ள இடமாகும். இங்கு வந்து நீரில் மிதக்கும் கட்டை (Surfing) மீது நின்றுகொண்டு விளையாடுவது பலருக்கு பொழுது போக்கு. இங்கு உள்ள கடலில் சுமார் 7 மீட்டர் உயர அலை எழும்பும். கடல் அமைதியாக இருக்கும்போது இங்கிருந்தே 'ஜாவா' (Java) வரைப் பார்க்க முடியும்.
இங்கு இருந்து ஆறு கிலோ தொலைவில் 'பூர ரம்புட் சிவி' (Pura Rambut Siwi) என்ற ஆலயம் உள்ளது. இது இந்தியக் கடலை நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டு உள்ளது. இதை நிறுவியவர் 'மஜாபிட்' டை (Majapahit ) சேர்ந்த பண்டிதரான 'டாங் ஹாங் நிரார்தா' (Dang Hyang Nirartha) என்பவர். இந்த ஆலயத்தில் அவருடைய தலை முடி புனிதப் பொருளாக (hair relic) வைக்கப்பட்டு உள்ளதாம்.
'பூர ரம்புட் சிவி' யைத் தவிர 'மெடிவி' கடல்கரையில் பல சிறிய ஆலயங்கள் உள்ளன.
Location Map of Medewi Beach
'மெடிவி' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக்செய்யவும்.
|
|
|