மென்ஜெங்கன் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
 மென்ஜெங்கன் தீவில் படகுகள் Author: Eric Bajart (Creative Commons Attribution 3.0 Unported)
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
மேற்கு பாலியில் உள்ளது 'மென்ஜெங்கன்' (Menjangan) தீவு. இந்த இடம் கடலில் விளையாடுவதற்கு ஏற்ற பகுதி. உள்ளூரில் உள்ள 'மென்ஜெங்கன்' என்ற மானின் (Deer) பெயரால் அமைந்து இருக்கும் இந்த தீவு 'தமன் நசயொனால் பாலி பரத்' (Taman Nasional Bali Barat) என்ற பகுதியை சேர்ந்ததாம்.
இங்கு எட்டு இடங்களில் கடலில் நீச்சலடிக்கக் கூடிய வகைக்கான நல்ல இடங்கள் உள்ளன. அதில் சிறந்த இடம் 'அங்கர் ரெக்' (Anchor Wreck) என்ற பகுதியாம்.
'மென்ஜெங்கன்' தீவிற்கு 'தெலுக் தேரிமாவில்' (Teluk Terima) உள்ள 'லுபுஹான் லாலாங்' (Labuhan Lalang) என்ற துறைமுகப் பகுதி வழியே செல்லலாம். அதற்கான படகுப் பயணத்துக்கான நுழைவுச் சீட்டை அங்குள்ள வன மேம்பாட்டு அலுவலகம் (Department of Forestry) மூலம் வாங்கலாம்.
Location Map of Menjangan Island
'மென்ஜெங்கன்' தீவு உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக்செய்யவும்.
View Menjangan Island in a larger map
|
|
|