நெகரா , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
மேற்கு பாலியில் 'நெகரா ' (Negara) என்பது மன்னர்கள் ஆண்ட ராஜ்யத்தின் ஒரு பகுதி. இங்கு பாலியின் 'புகி' (Bugi) எனும் இனத்தவர் குடியேறி உள்ளார்கள். இந்த நகருக்குள் நடந்து சென்றால் 'சுலவேசியில்' (Sulawesi) நடந்து செல்வது போல உணரலாம். 'லோலோனை' (Lolon) சேர்ந்த 'புகி' இனத்தவர் 'ஜலன் கடோத் சுப்ரதோ' (Jalan Gatot Subroto) என்ற பகுதியில் உள்ள நதியின் இருபுறத்திலும் குடியேறி உள்ளனர்.
'நெகராவில்' வீடுகளில் மாடிகளின் முன் அமைப்பு நன்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'ஜலான் குனுங் ஆகுங்' (Jalan Gunung Agung) மற்றும் 'ஜலான் புன்கக் ஜெயா' (Jalan Puncak Jaya) போன்ற பகுதிகளில் மிக அழகான வீடுகள் கட்டப்பட்டு உள்ளதைக் காணலாம். 'லோலோனில்' இஸ்லாமிய பாடசாலைகள் 'பெசண்டேரின்' (pesantren) என்ற பெயரில் நடக்கின்றன .
பெரிய பெரிய மூங்கில் இசை வாத்தியங்களை பயன்படுத்தி நடைபெறும் 'நெகரா' நடனம் பெருமை வாய்ந்தது. ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டு சக்கர தேரை மாடுகள் இழுத்துக் கொண்டு ஓடும் - 'மிகிபுங்' (mekepung) எனப்படும் - விளையாட்டுப் போட்டி நடைபெறும்.
'நெகராவின்' மேற்குப் பகுதியில் 'ரேனிங்' (Rening) என்ற கடற்கரை உள்ளது. அங்கு நின்றுகொண்டு தூரத்தில் தெரியும் ஜாவாவின் அழகை கண்டு ரசிக்கலாம். நெகராவில் இருந்து 13 கிலோ தொலைவில் உள்ளதே 'கண்டி குசுமா' (Candi Kusuma) எனும் கடற்கரை. 'நெகராவின்' வடக்குப் பகுதியில் 'கதோலிக மக்கள்' (Catholics) அதிகம் வசிக்கும் 'பல்சாரி ' (Palasari) என்ற கிராமமும், 'ப்ரோடஸ்டன்ஸ்' (Protestant ) அதிகம் வசிக்கும் 'பிம்பிங்க்சாரி' (Blimbingsari) எனும் கிராமமும் உள்ளன. அந்த கிராமங்கள் 1930 ஆம் ஆண்டு 'டச்' (Dutch) ஆட்சியினரின் குடிமக்கள் மதம் மாறியபோது ஏற்படுத்தப்பட்டவை.
Location Map of Negara
'நெகரா' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|