நேகா கலை காட்சியகம் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'நேகா' கலைக் காட்சியகம் (Neka Art Museum) பாலியின் கலையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ள அற்புதமான காட்சியகம். இது தனியாருக்கு சொந்தமானது. இதை 'சுதேச நேகா' என்பவர் 1976 ஆம் ஆண்டில் நிறுவினார். ‘சங்கிங்கன்’ (Sangigan) அருகில் உள்ள 'உபுட்' (Ubud) மற்றும் 'கடேவடனுக்கு' (Kedewatan) இடையில் 'ஜலன் ரயா கம்புஹன்' (Jalan Raya Campuhan) என்ற இடத்தில் இது அமைந்துள்ளது.
ஏழு மாடியைக் கொண்ட இந்த காட்சியகத்தில் அனைத்துப் பொருட்களும் காலத்தின் வரிசையின்படி வைக்கப்பட்டு உள்ளன என்பதினால் அந்த கலாசாரம் எப்படி ஒவ்வொரு ஆண்டும் மாறி வந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது. இங்குள்ள கலை நயம் மிகுந்த ஓவியங்களை 'குஸ்தி நியோமான் லேம்பாத்' (Gusti Nyoman Lempad) என்ற பாலியை சேர்ந்த ஓவியரே வரைந்து உள்ளார்.
|
|
|