பெஜெங் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'பெஜெங்' (Pejeng) எனப்படும் கிராமம் மத்திய பாலியின் 'உபுட்டில்' (Ubud) உள்ள 'பெடிலு' (Bedulu) மற்றும் 'தம்பக்ஸரிங்' (Tampaksiring) என்ற இடங்களுக்கு இடையே உள்ளது. இது 'பெஜெங்-பெடுலு' ராஜ்யத்தை சார்ந்தது. இந்த கிராமத்தில் உள்ள புராதான கலைச் சின்னங்களைக் கொண்ட காட்சியகம் (Museum) மிகவும் அற்புதமானது. இங்கு பண்டை காலத்திய நினைவுப் பொருட்கள் (relics) மற்றும் புராதான கலைப் பொருட்களும் (prehistoric artifacts) உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ஆமை வடிவில் (turtle-shaped) பண்டைய காலத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள சவப்பெட்டி (sarcophagi) ஆகும் .
அந்த காட்சியகத்தின் அருகில் மூன்று ஆலயங்கள் உள்ளன. அதன் அருகில் உள்ள விவசாய நிலத்தில் அர்ஜுனன் (Arjuna) தவம் செய்யும் ஆலயம் (meditating temple) என்ற அர்த்தத்தை தரும் 'பூர அர்ஜுன மேடபா' (Pura Arjuna Metapa) என்ற ஆலயம் உள்ளது. அங்கு பல சிற்பங்களும் உள்ளன. அவை அங்கிருந்த நீர் வீழ்ச்சி ஆலயத்தின் அங்கமாக இருந்து இருக்கலாம்.
அந்த ஆலயத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 'பூர கேபோ இடன் ' (Pura Kebo Edan) என்ற ஆலயம் உள்ளது. அங்குள்ள பயங்கரமான செதுக்கப்பட்ட உருவங்களைக் (demonic statuary) காணும்போது அது புத்த மதத்தை சேர்ந்த பைரவர் (Bhairava Buddhism) ஆலயமாக இருந்து இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. அந்த ஆலயத்தில் உள்ள 3.6 மீட்டர் உயர மூல தேவர் ஒரு பிணத்தின் மீது நின்றுகொண்டு நடனம் (dancing on a corpse) ஆடும் வகையில் காணப்படுகிறார்.
‘பெஜென்கின்’ வலது பக்கத்தில் இரண்டு கிலோ தொலைவில் உள்ளது மூன்றாவது ஆலயமான 'பூர பெனேடரன் சஷிஷ்' (Pura Penataran Sasih) என்பது. இங்குதான் 74 அங்குல அகல 'பெஜெங் சந்திரன்' (Pejeng Moon) என்ற மிகப் பெரிய புனித மத்தளம் (sacred drum) வைக்கப்பட்டு உள்ளது. அந்த பித்தளை மத்தளத்தை பெரிய பீடத்தின் மீது வைத்து உள்ளார்கள். அதை தூரத்தில் இருந்துப் பார்த்தால் கீ. மூ 1500 ஆம் ஆண்டுகளில் 'வடக்கு வியட்னாமில்' (northern Vietnam) இருந்த 'டாங் சாங் மத்தளத்தைப்' (Dong Son drums) போலவே காட்சி தருவதைப் காணலாம்.
Location Map of Pejeng
இந்த கிராமம் உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
 Dong Son Bronze Drum of northern Vietnam, in Museu Guimet, Paris Author: MikeHS (Creative Commons Attribution ShareAlike 3.0)
|