பெலியடன் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'பெலியடன்' (Peliatan ) என்ற சிறிய கிராமம் மத்திய பாலியில் உள்ளது. கலைகளை அதிகம் ஊக்குவித்து வந்த முன்னர் காலத்தைய 'சுகாவடி' (Sukawati) என்ற மன்னர்களின் ஆட்சியில் பெருமை பெற்று இருந்த இடம் இது. 'உபுட்'(Ubud) பெருமை பெறுவதற்கு முன்னரே இது பிரபலமாக இருந்தது.
 பெலியடன் , உபுட் Author: Nepomuk (Creative Commons Attribution 3.0 Unported)
‘பெலியடனை’ சேர்ந்த கலைஞர்கள் அகில உலகிலும் பெருமைப் பெற்றவர்கள். அவர்கள் பாலியின் கலைகளை அனைத்து இடங்களுக்கும் விஜயம் செய்து பரப்பி வந்தார்கள். இந்த கிராமம் மக்களின் கைவேலைகள், கலை நிகழ்ச்சிகளைத் (performing arts) தவிர மரக்கட்டைகளில் வர்ணம் (woodpainting) தீட்டுவது பிரசித்தமானது.
‘பெலியடனின்’ தெற்குப் பகுதியில் பாலியின் 'ஆகுங் ராய்' (Agung Rai) என்பவர் அமைத்து உள்ள 'ஆகுங் ராய் கலைக் கூடம்' (Agung Rai Museum of Art) உள்ளது. இந்த கலை கூடத்தின் மூன்று கட்டிடங்களில் பாலி மற்றும் இந்தோனேசியாவின் கலைப் பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.
Location Map of Peliatan
‘பெலியடனின்’ தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக் செய்யவும்.
|