பெமுடெரன் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'பெமுடெரன்' (Pemuteran) என்ற கிராமம் வடக்கு பாலியில் நல்ல தங்கும் (Resort) இடம் உள்ளப் பகுதி. கடல் மணல் வெள்ளை வெளேர் (white-sand) என்று இருக்க இந்தக் கடலில் இங்கு கடல் பிராணிகளும் (Coral Reef) விதவிதமான வண்ணமய மீன்களும் (Fishes) காணப்படுகின்றன. மேலும் இங்கு கடலில் நீச்சலடித்துக் கொண்டும், கடலில் மிதக்கும் கட்டைகள் மீது நின்றவண்ணம் கேளிக்கை செய்துகொண்டும் (snorkeling spots) விளையாடும் வசதிகள் உள்ளன. 'மென்ஜங்கன்' (Menjangan Island) தீவைப் பார்க்கப் போகும் பயணிகள் இங்கு தங்கிக் கொள்வது சிறந்தது.
 பசுபிக் கடலில் இரண்டு கடிவாளம் பூட்டப்பட்டது போலக் காணப்படும் மீன்கள் Author: Bernard E. Picton (Creative Commons Attribution 3.0 Unported)
'பெமுடெரன்' கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடம் 'பனியுடுவேடங்' (Banyuwedang) என்பது . அதன் அர்த்தம் சுடுநீர் வீழ்ச்சி (Hot Springs) என்பது. அங்குள்ள பல நீர்வீழ்ச்சிகளின் தண்ணீர் வியாதிகளை குணப்படுத்தும் குணம் (curative powers) கொண்டவையாம். ஆனால் அந்த நீர்வீழ்ச்சிகள் கடலின் அலைகள் மிக உயரமாக எழும்பி வரும்போது அதில் மறைந்து விடுகின்றன. அந்த நீர்வீழ்ச்சிகள் உள்ள ஒரு இடத்தில் கட்டப்பட்டு உள்ளது நவீன மயமான 'மேஞ்சன்கனின் மெம்பி ரிசார்ட்' என்ற பயணிகள் தங்கும் இடம்.
'பெமுடெரன்' கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ளது 'பூர புலகி' (Pura Pulaki) என்ற ஆலயம் . இந்த ஆலயமும் 'மேஞ்சன்கனின்' பண்டிதரான 'டாங் ஹாங் நிரார்தாவுடன்' (Dang Hyang Nirartha) தொடர்பு கொண்டதுதான். அவர் இங்கிருந்த உள்ளூர் மக்களை பேய் - பிசாசுகளாக demons) மாற்றிவிட்டார் என்றக் நம்பிக்கை உள்ளது.
Location Map of Pemuteran
பெமுடெரன் உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக்செய்யவும்
View Pemuteran in a larger map
|