புபுவான் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
புபுவான் (Pupuan) என்ற பகுதி பாலியில் உள்ள இடங்களில் எப்போதுமே அதிக ஈரப்பதம் (Wet area) மிக்க இடம் ஆகும். மலை மீது உள்ள இந்த இடம் மிகக் குளுமையான (Coolest) இடம் என்பதினால் நிறைய காய்கறிகள் (Vegetable Farming) விளைகின்றன. அங்கு செல்லும் வழி முழுவதுமே அற்புதமான இயற்கை அழகுக் காட்சிகள் நிறைந்த இடமாக உள்ளன.
நகரத்தில் இருந்து 'புசுனக்பயு' (Busungbiu) என்ற இடத்தின் வழியாகச் செல்லும்போது பெரும்பாலும் வனப் பிரதேசமாக உள்ளது. மேலும் கீழுமாக ஏறிக் கொண்டுப் போகையில் 'பிளிம்பிங்' (Blimbing) மற்றும் 'பாஜ்ரா' (Bajra) எனும் பகுதிகளைக் கடக்கையில் இருபுறமும் பசுமையாகப் போர்த்தியது போல உள்ள அரிசி விலை நிலங்களைப் பார்க்கலாம்.
'பபுவானில்' இருந்து 12 கிலோ தொலைவில் உள்ள 'ப்ளிம்பிங்கில்' நல்ல தங்கும் இடங்களும் உள்ளன.
Location Map of Pupuan
'புபுவான்' உள்ள இடத்தின் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
View Pupuan in a larger map
|
|
|