மெடுவே கரங் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
'பூர மெடுவே கரங்' (Pura meduwe Karang) என்ற ஆலயம் 'குபுடம்பஹன்' (Kubutambahan) என்ற இடத்தில் உள்ளது. இந்த ஆலயத்தில் பூக்களைப் போன்ற (flowery style) உருவத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளது தனிச் சிறப்பு. இந்த பாணியில் சிற்பம் அமைப்பது வடக்கு பாலியின் ஒரு சிறப்பு கலை. அந்த ஆலயத்துக்குள் செல்ல பல இரு வழிக் கதவுகளை (split gates) தாண்டிப் போக வேண்டும்.
ஆலய வளாகத்துக்குள் மத்தியில் 'பெடரா லுஹூர் இங் அங்க்காசா' (Betara Luhur Ing Angkasa) என்ற ஆலயம் உள்ளது. அது பூமி தேவதையை (lord of the ground) பெருமைப் படுத்தும் ஆலயமாம். அங்குள்ள ஒரு ஆலயத்தில் ஐரோப்பியா நாட்டவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற சிற்பம் உள்ளது. அது 1904 ஆம் ஆண்டில் 'பூர மெடுவே கரங்' ஆலயத்துக்கு விஜயம் செய்த W.O.J. நியுவேங்கம்ப் என்ற 'டச்' நாட்டவரின் (Dutch artist W.O.J. Nieuwenkamp) சிற்பமாம்.
 ஐரோப்பியா நாட்டவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற சிற்பம் Author: D10n2000 (Creative Commons Attribution 2.0 Generic)
Location Map of Pura Meduwe Karang
'பூர மெடுவே கரங்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|