பூர சடா , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
பாலியின் 'கபால்' (Kapal ) கிராமத்தில் உள்ள ஆலயமே 'பூர சடா' (Pura Sada) .மஜாப்ஹிட் (Majapahit period) காலத்தை சேர்ந்த ''மேங்க்வி' (Mengwi) மன்னர் அரசு ஆலயம் இது. 'பூர தமன் அயுன் ' (Pura Taman Ayun) ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பாகவே கட்டப்பட்டு உள்ள ஆலயம் இது. ஆலயத்தின் அமைப்பைப் பார்கையில் அது 1950 அல்லது 1960 ஆம் ஆண்டுகளை சேர்ந்தது எனத் தெரிகின்றது. 1917 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் (earthquake) முதலில் கட்டப்பட்டு இருந்த ஆலயம் அழிந்து விட்டது என்றாலும் கட்டிட மற்றும் புதைப் பொருள் ஆராய்ச்சி வல்லுனர்கள் (archaeologists) அதை 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆலயம் போல மீண்டும் புனர் அமைத்து உள்ளார்கள்.
இந்த ஆலயத்தின் முக்கியமான அம்சம் மேரு மலையைப் போன்ற பதினோரு அடுக்கு கட்டி அமைப்பே. ஜாவா ஆலயம் போல அமைக்கப்பட்டு உள்ள இந்த ஆலயம் ஒரு அபூர்வமான ஆலயமே. ஆலய வளாகத்துக்குள் 54 சிறிய ஆலயங்களும் உள்ளன. அவை 'மஜாப்ஹிட்' மன்னனது (King of Majapahit) சேவகர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சேவகர்கள் (servants) ஜாவாவில் (Java) இருந்து மன்னரின் அஸ்தியை கடல் வழியே கொண்டு வந்தபோது கடலில் மரணம் அடைந்து விட்டார்கள். ஆனாலும் இங்குள்ள மேரு ஆலயம் மன்னரின் கல்லறை மண்டபமாகவே (cremation tower) அமைந்து உள்ளது.
மேரு ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் எட்டு கடவுளின் சிலைகள் உள்ளன. ஆலயத்தின் கீழ் பகுதியில் ஏழு கிரகங்களின் அதிபதிகள் உள்ளார்கள். பாலியில் உள்ள அனைத்து ஆலயங்களைப் போலவே ஆலயத்தின் நுழை வாயிலில் பயங்கரமான உருவத்தைக் கொண்ட 'போமா' (Boma) எனப்படும் காவல் தெய்வங்களின் சிலைகள் (gate guardian) காவலில் நிற்பது போல அமைக்கப்பட்டு உள்ளன.
Location Map of Pura Sada
'பூர சதாவின்' இருப்பிடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|