பூர தமன் அயுன் , பாலி
(Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியின் மிக முக்கியமான தண்ணீர் ஆலயமே 'பூர தமன் அயுன்' (Pura Taman Ayun) என்பது. மேங்க்வி (Mengwi) எனும் இடத்தில் உள்ள இதை இந்துக்களின் உலகம் என்று கூறலாம். இதை சுற்றி உள்ள அகழியை (Moat) கடல் என்றும், அதன் நடுவில் உயரமாக உள்ள ஆலயத்தை மேரு மலை (Meru Mount) என்றும் கூறுகிறார்கள்.
 பூர தமன் அயுன் (19 June, 2004) © Timothy Tye using this photo
பாலி நாட்டின் பூகோளப் பரப்பை மனதில் கொண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. மலை மீது இருந்து விளை நிலங்களில் பாயும் தண்ணீரை அந்த இடத்தில் வெளியாகும் பிரபஞ்சத்தின் கதிர் அலைகள் (Cosmic Rays) தாக்கி தூய நீராக வைத்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 'மேங்க்வி' ராஜ்யத்தை ஸ்தாபனம் செய்த மன்னர் குலத்தை சார்ந்த 'I குஸ்தி அகுங் அனோம்' (I Gusti Agung Anom) என்பவரே 1634 ஆம் ஆண்டு 'பூர தமன் அயுன்'னை கட்டி உள்ளாராம். 'பூர தமன் அயுன்' என்றால் 'அனைத்து வேண்டுகோட்களையும் நிறைவேற்றும் ஆலயம்' என்று அர்த்தமாம். அந்த ஆலயத்தை 1937 ஆம் ஆண்டில் பழுது பார்த்து மீண்டும் புதிதாக்கி கட்டி உள்ளார்கள். அந்த வளாகத்துக்கு உள்ளே மேங்க்வி மன்னர்களின் ஆலயம் உள்ளது.
'பூர தமன் அயுன்' என்பதை 'பென்யவாங்கன்' (penyawangan) என்றும் மற்ற புனித இடங்களையும் அங்கு தரிசிக்க முடிந்த ஆலயம் என்றும் கூறுகிறார்கள். பாலி மலை முட்டில் உள்ள 'குனுங் ஆகுங்' (Gunung Agung), 'குனுங் படுகவு'(Gunung Batukau) , 'குனுங் படூர்' (Gunung Batur) மற்றும் மேங்வியில் உள்ள 'பூர சடா' (Pura Sada) போன்ற ஆலயங்களின் தாய் ஆலயமாம் 'பூர தமன் அயுன்' .
 பூர தமன் அயுனின் கோரி ஆகுங் எனப்படும் நுழை வாயில் (19 June, 2004) © Timothy Tye using this photo
Location Map of Pura Taman Ayun
Click here to view the Google Map to Pura Taman Ayun.
 பூர தமன் அகழி (19 June, 2004) © Timothy Tye using this photo
 பூர தமன் அயுனில் மரக்கட்டையால் செய்யப்பட்டு உள்ள மேளம் (19 June, 2004) © Timothy Tye using this photo
|