பூர தனாஹ் லாட், பாலி
 பூர தனாஹ் லாட் (19 June, 2004) © Timothy Tye using this photo
(Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியில் சிலை வழிபாடு (iconic temple) உள்ள முக்கியமான ஆலயம் 'பூர தனாஹ் லாட்' (Pura Tanah Lot) என்பது. கடலில் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மேட்டில் வளர்ந்து உள்ள மரம் செடிகளின் இடையே அமைந்து உள்ளது இந்த அற்புதமான ஆலயம்.
'பூர தனாஹ் லாட்' என்றால் தரை மற்றும் கடலில் உள்ள ஆலயம் (Temple of the Land and the Sea) என்று அர்த்தமாம். அதை உறுதிப்படுத்துவது போல இந்த இடம் கடலில் இருந்து 100 மீடர் தள்ளி உள்ளது. கடலின் அலைகள் மிகவும் குறைவாக இருக்கும்போது இந்தப் பகுதியின் பூமி 'மாண்ட செயின்ட் மைக்கேல்' (Mont Saint-Michel) போல பாலியின் மத்தியப் பகுதியுடன் இணைந்து உள்ளதைக் காணலாம்.
20 ஆம் நூற்றாண்டு வரை ' பூர தனாஹ் லாட் ' கடல் முனைப் பகுதியாகவே இருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் அங்குள்ள நீண்ட பகுதிகளும், பாறைகளும் கடலினால் அரிக்கப்பட்டு மேட்டு தீவைப் போன்ற பகுதியை மட்டும் விட்டு வைத்து உள்ளது.
தற்போது 'பூர தனாஹ் லோட்' கரையை ஒரு பூங்காவாக மாற்றி வைத்து உள்ளார்கள். அங்கிருந்து ஆலயத்தை மட்டும் அல்ல 'பூர படு போலோங்'கையையும் (Pura Batu Bolong) பார்க்க முடியும். அந்த ஆலயத்தின் அழகைப் பார்க்க வேண்டும் எனில் மாலையிலேயே செல்ல வேண்டும். அப்போது கூட்டம் அதிகம் இருந்தாலும் அதை சூரிய அஸ்தமனமான மாலையில் காணுவதே ரம்யமானது.
 சூரிய அஸ்தமனத்தின்போது பூர தனாஹ் லோட் (19 June, 2004) © Timothy Tye using this photo
பாலி இந்துக்களின் பல கடவுள் ஆலயங்களை தன்னுள் கொண்டுள்ள ஆலயம் இது. இந்த ஆலயத்தின் கடலை நோக்கியப் பகுதி பாலியின் கடல் கடவுளான 'பெடர டேங்காஹ் சேகராவிற்காக' (Betara Tengah Segara) அற்பணிக்கப்பட்டதாம். அது போல கரையை நோக்கி அமைந்துள்ள சிலை கடவுள் 'குனுங் படுகவுக்காக' (Gunung Batukau) அமைக்கப்பட்டதாம்.
இந்த ஆலயம் எழும்பக் காரணமாக இருந்தவர் 'மஜாபஹிட்டை' (Majapahit) சேர்ந்த ' டாங் ஹாங் நிராதா' (Dang Hyang Nirartha) என்ற பண்டிதரே. பாலியின் பூகோள அமைப்பைப் பார்த்தவர் அந்த தீவிற்கு வரவுள்ள கடல் வழி நோய்கள் (epidemics) மற்றும் ஆபத்துக்களையும், தெய்வ சாபங்களினால் (scourges) ஏற்படக் கூடிய அபாயங்களையும் தவிர்க்கவே அங்கு அந்த ஆலயத்தை அமைக்குமாறு கூறினாராம்.
அங்கு செல்பவர்கள் அந்த கடலில் அமைந்துள்ள குகையில் ஒரு இடத்தில் தன்னை தானே சுற்றிக் கொண்டு அமர்ந்து உள்ள கடல் பாம்பையும் (venomous snake) பார்க்கலாம். இந்தப் பகுதியில் கடல் கரையில் அமைந்து உள்ள ஆலயம் இது மட்டும் அல்ல 'தனாஹ் லாட்டின்' அருகில் உள்ள இன்னொரு பகுதியில் உள்ளது 'பூர லாகூர் பகேன்டுங்கன் ' (Pura Luhur Pekendungan) எனும் ஆலயம் .இந்த ஆலயமும் மிகப் பழமையானது. இங்குள்ள மற்ற ஆலயங்கள் 'பூர ஜீரோ கண்டாங்' ( Pura Jero Kandang) , 'பூர படு மேசன்' (Pura Batu Mejan) , 'பூர குலாஹ்' (Pura Galuh) மற்றும் 'பூர படு போலாங்' (Pura Batu Bolong) போன்றவை ஆகும்.
Location Map of Pura Tanah Lot
Click here to view the Google Map to Pura Tanah Lot.
|