பூர தெகெஹ் கோரிபன் , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'பூர தெகெஹ் கோரிபன்' (Pura Tegeh Koripan) ஆலயம் பாலியின் மிகப் பழைமையான ஆலயம் ஆகும். இது 'குனுங் பெனுலிசன்' (Gunung Penulisan) மலைப் பகுதியில் உள்ளது. அதன் உயரம் 1400 மீட்டர் ஆகும்.
இந்த ஆலயம் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. அதன் வளாகத்துக்குள் ஏழு அடுக்கில் ஐந்து ஆலயங்கள் உள்ளன. இது இந்து மற்றும் புத்த மதங்களின் காலமான பாலியர்கலின் கற்காலத்தை (megalithic culture) சேர்ந்தது.
அவற்றில் மிக அதிக உயரத்தில் உள்ளதும், முக்கியதுமான 'பூர பெனராஜன்' (Pura Panarajon) என்ற ஆலயத்தில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்களும் சிலைகளும் கிடைத்து உள்ளன.
Location Map of Pura Tegeh Koripan
'பூர தெகெஹ் கோரிபன்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|