பூர தீர்த்த எம்புல், பாலி
(Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'பூர தீர்த்த எம்புல்' (Pura Tirta Empul) என்பது பிரபலமான சுற்றுலா தலம். இங்குள்ள 'தம்பாரிசிங்' (Tampaksiring) என்ற புனித நீருற்று ஆலயம் (sacred spring temple) வரும் நீருக்கு 'பக்ரிசான் நதியே' காரணம் . இங்கு பல சதுர வடிவில் கட்டப்பட்டு உள்ள பெரிய நீர் நிலைகளும், குளங்களும் உள்ளன. அங்கு அமைக்கப்பட்டு உள்ள பல நீர்க் குழாய்கள் மூலம் பளிங்குக் கண்ணாடி போன்ற சுத்தமான தண்ணீர் வெளி வருகின்றது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு குழாயில் இருந்தும் அவர்கள் வேண்டிக் கேட்கும் புனித தண்ணீர் வெளி வருமாம்.
இந்த 'பூர தீர்த்த எம்புல்' பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது. பாலியில் உள்ள இந்த புனித நீருற்று ஆலயத்துக்கு இந்தத் தீவின் அனைத்துப் பகுதி மக்களும் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.
 பூர தீர்த்த எம்புல் (18 June, 2004) © Timothy Tye using this photo
 பூர தீர்த்த எம்புல் தண்ணீர் குழாய்கள் (18 June, 2004) © Timothy Tye using this photo
|