பூர உலுன் தனு படூர் , பாலி
(Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியில் உள்ள ஆலயத்தில் 'பெசக்கிஹ்'கிற்கு (Besakih) அடுத்தபடியாக மிகப் புனிதமாக கருதப் படும் ஆலயமே 'பூர உலுன் தனு படூர்' (Pura Ulun Danu Batur) ஆலயம். இந்த ஆலயம் நதிகள் மற்றும் ஏரிகளை பாதுகாக்கும் கடவுளான 'தேவி படரி உலுன் தனு'விற்காக (Dewi Batari Ulun Danu) அமைக்கப்பட்டது. இதன் அர்த்தம் 'படூர் ஏரியின்' தலை மீது உள்ள ஆலயம்' (Temple at the head of Lake Batur) என்பதே .
 பூர உலுன் தனு படூர் Author: 㣠(Creative Commons Attribution ShareAlike 3.0)
'பூர உலுன் தனு படூர்' ஆலயம் முதலில் படூர் ஏரியின் கரையில் படூர் கிராமத்தில் இருந்தது. 1917 ஆம் ஆண்டு 'குனுங் படூர்' எரிமலை வெடித்தபோது (erupted ) அதில் இருந்து வெளிவந்த தீ பிழம்புகளும் குழம்புகளும் (lava flow) இந்த ஆலயத்தின் சுவர் வரை வந்து நின்று விட்டதாம். ஆனால் மீண்டும் அந்த ஏறி மலை தீயைக் கக்கியபோது 1926 ஆம் ஆண்டு அந்த கிராமம் மட்டும் அல்ல அந்த ஆலயமும் அழிந்ததாம்.
அதன் பின் அந்த ஆலயம் பெயர்த்து எடுக்கப்பட்டு கல்தேர (Caldera) என்ற இடத்தில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டது. தபோது 'பூர உலுன் தனு படூர்' ஆலய வளாகத்துக்குள் ஒன்பது குழுவாக பிரித்து வைக்கப்பட்டு உள்ள 285 சன்னதிகள் - விவசாயம், நீர்பாசனம், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றைக் காக்கும் கடவுட்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளனவாம்.
இந்த ஆலய வளாகத்துக்குள் உள்ள மூல ஆலயம் 'பூர பெனடரன் ஆகுங் படூர்' (Pura Penataran Agung Batur) என்ற கடவுளுக்காக அமைக்கப்பட்டு உள்ளது. அது ஆலய வளாகத்துக்குள் உள்ள நடு மையத்தில் இருந்து பதினோரு அடுக்கு உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தாழ்வாரத்தில் உள்ள ஒன்பது மேரு ஆலய சன்னதிகள் (9-tier meru shrines) 'குனுங் படூர்' (Gunung Batur) , 'குனுங் அபாங்'(Gunung Abang) , 'இடா படாரா டேலம்' (Ida Batara Dalem) மற்றும் 1460 முதல் 1550 ஆண்டுகளில் ஆண்டவரும் கடவுளாக கருதப்பட்ட மன்னனனுமான 'வாடுரெங் காங்' (Waturenggong) என்பவர்களுக்காக அமைந்து உள்ளது.
அது மட்டும் அல்லாமல் வியாபாரங்களை பாதுகாக்கும் கடவுட்களை ஆராதித்த முனிவரான 'இட ரது அயு சுபந்தார்' (Ida Ratu Ayu Subandar) என்பவருக்கும் சன்னதி உள்ளது.
Location Map of Pura Ulun Danu Batur
Click here to view the Google Map to Pura Ulun Danu Batur.
|