பூர உலுன் தனு பிரடன் , பாலி
(Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'பூர உலுன் தனு பிரடன்' (Pura Ulun Thanu Pratan) என்கின்ற ஆலயம் நீர்பாசன கடவுளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆலயம். இது 'பெடுகுல்' என்ற (Bedugul ) நிலபரப்பில் உள்ள 'லேக் பிரதான்' ( Lake Bratan) என்ற ஏரியின் கரையில் உள்ளது. 1633 ஆம் ஆண்டில் இதைக் கட்டியவர் 'I குஸ்தி ஆகுங் புடு' (I Gusti Agung Putu) என்ற 'மென்க்வியை' (Mengwi) ஆண்ட மன்னன் ஆவர். அவரே 'பூர தமன் அயுனையும்' (Pura Taman Ayun) கட்டியவர்.
 பூர உலுன் தனு பிரடன் (19 June, 2004) © Timothy Tye using this photo
ஏரிக் கரை அருகில் அமைந்து உள்ள 'பூர உலுன் தனு பிரடன்' ஆலயத்தின் பக்கத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இரண்டு தீவுகளில் இரண்டு மேரு ஆலயங்கள் உள்ளன. அதைத் தவிர ஏரிக் கரையில் பல சிறிய ஆலயங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று ஏரியைக் காக்கும் 'தேவி தானு'வுக்காக (Dewi Danu) 'பூர தேரடை பாங்' (Pura Teratai Bang) என்ற பெயரிலும் இன்னொன்று உணவை தரும் கடவுளுக்காக 'பூர தலம் புர்வா' (Pura Dalem Purwa) என்ற பெயரில் அமைந்து உள்ளது.
'பிரடன்' ஏரிக்கு அருகில் இரண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு உள்ள தீவு ஒன்றில் 11 அடுக்கு 'மேரு' ஆலயம் 'குனுங் மங்கு' (Gunung Mangu) என்ற பெயரில் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக (Hindu god Wisnu) அமைந்து உள்ளது.
 பூர உலுன் தனு பிரடன் (19 June, 2004) © Timothy Tye using this photo
அதில் இரண்டாவது சிறிய தீவை 'லிங்கா பேடக்' (Lingga Petak) என அழைகின்றார்கள். இந்த ஆலயம் இந்துக் கடவுளான சிவனுக்காக (Hindu god Shiva) அற்பணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயம் 1968 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டபோது சிவப்பு மற்றும் வெள்ளை கருப்பில் அங்கு மூன்று வட்டவடிவமான கற்கள் கிடைத்தனவாம் . அவற்றில் ஒன்று சிவ லிங்கமாம்.
Location Map of Pura Ulun Danu Bratan
Click here to view the Google Map to Pura Ulun Danu Bratan.
|