செபடு , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
மத்திய பாலியில் உள்ளது 'செபடு' (Sebatu) என்ற கிராமம். இந்த கிராமம் மரக் கட்டைகளில் சிற்பங்கள் வடிவமைத்து வண்ணம் தீட்டும் கலைகளிலும் , நடனத்திலும் புகழ் பெற்றது. இது ஒரு மேட்டுப் பகுதியில் உள்ளது. இதன் வடக்கு பக்கத்தில் கிராம ஆலயமும், சமுதாயக் கூடமும் (community pavilion) உள்ளன.
இந்த கிராமத்தின் மேற்குப் பக்கத்தில் மரக்கட்டைகளில் சிற்பங்கள் செதுக்கும் தொழில் சாலைகளும் கலைஞர்களும் இருக்க அதன் மேற்குப் பக்கத்தில் 'பூர குனுங் கவி' (Pura Gunung Kawi) என்ற அற்புதமான ஆலயம் உள்ளது. ஆனால் இந்த ஆலயம் மன்னர்கள் காலத்தைய 'குனுங் கவி' (Gunung Kawi Royal Monuments) ஆலய சின்னங்களில் இருந்து மாறுபட்டது. இந்த ஆலயத்தில் பக்தர்கள் குளிக்கும் வகைக்கான நீர்வீழ்ச்சியும் (bathing springs), மீன்கள் நிறைய உள்ள நீர் குளமும் (carp-filled spring poo) உள்ளன.
Location Map of Sebatu
‘செபடு’ உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
|