சிங்கராஜா , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
வடக்கு பாலியின் 'புலேலேங்' (Buleleng) பகுதியில் உள்ள 'சிங்கராஜா' (Singaraja) என்பது ஆளுநர்களின் நிர்வாகப் பகுதியாகும். 'லோவினாவின்' (Lovina) கிழக்குப் பகுதியில் உள்ள 'சிங்கராஜா' 28 சதுர கிலோ மீட்டர் உள்ளது. அதன் ஜனத் தொகை 80000 மக்கள் ஆகும். தெற்கு பாலி உருவாகும் முன்னால் 1953 ஆம் ஆண்டுவரை 'டச்' (Dutch) ஆட்சியினரின் நிர்வாகப் பகுதியாகவே இது இருந்தது.
 சிங்கராஜா Author: 㣠(Creative Commons Attribution 3.0 Unported)
இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் (Muslim ) தாக்கமும் உண்டு. மேலும் இங்கு 'சீனர்கள்' (Chinese) , 'ஜாவானியர்கள்'(Javanese) மற்றும் 'புகி' (Bugis) இனத்தவர்கள் வணிகர்களாக உள்ளார்கள். 'வம்சாவளி பாலியர்களும்' (Balinese) கிழக்குப் பகுதியில் தமக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக் கொண்டு உள்ளார்கள்.
'சிங்கராஜாவின் 'மத்தியப் பகுதியில் 'சாலன் அஹமத் யானி' மற்றும் 'சாலன் டிபோனேகோர் ' (Jalan Diponegoro) என்ற பகுதிகளை தொட்டவாறு 'பசர் அன்யர்' (Pasar Anyar) என்ற முக்கிய கடைவீதி உள்ளது.
'சிங்கராஜாவை' சுற்றி உள்ள இடங்கள்
- 'புலேலேங்' நதி (Buleleng River)
இந்த நதி சிங்கராஜாவின் வழியே ஓடுகின்றது. அதன் கடற்கரையில் நெருக்கமாக நிறைய வீடுகள் உள்ளன.
- கெடாங் கேர்த்யா (Gedong Kertya )
1928 ஆம் ஆண்டில் இந்த வாசகசாலையை (Library ) 'டச்' ஆட்சியினர் நிறுவினார்கள். அங்கு பனைமர சுவடிகளில் (palm leaves) பாலியின் வரலாறு உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு-முக்கியமாக மருத்துவத்திற்கு (medicinal recipes)- உதவும் வகையில் உள்ளது.
- சுதந்திர எழுச்சி சின்னம் (Independence Monument )
'கெடுத் மேர்டா' (Ketut Merta) என்பவற்றின் சிலை உள்ள இடம் . இரண்டாம் உலகப் போரின்போது அவர் இங்கு 'டச்' (Dutch) அரசக் கொடிக்கு பதிலாக இந்தோனேசியாவின் (Indonesian) கொடியை ஏற்றியதினால் சுட்டுக் கொல்லப்பட்டார் .
- ஆகுங் ஜமிக் மசூதி (Masjid Agung Jamik)
'சிங்கராஜாவின்' முக்கியமான மசூதி (main mosque). அதன் மேல்கூறை நீல நிறத்தில் பளபளக்கின்றது. 'ஜலன் இமாம் போன்ஜோல்' (Jalan Imam Bonjol) என்ற இடத்தில் அது உள்ளது.
- நுர் மசூதி (Masjid Nur )
'ஜலன் எர்லாங்கா' (jalan Erlangga) என்ற இடத்தில் இந்திய நாட்டு கட்டிடக் கலையில் கட்டப்பட்டு உள்ள சாதாரணமான மசூதி.
- நகசெப்ஹ (Nagasepaha)
'சிங்கராஜாவின்' தென் புறத்தில் இருந்து எட்டு கிலோ தொலைவில் உள்ள கிராமம். இங்கு கண்ணாடிகள் மீது ஓவியம் (glass painting) வடிப்பது குடுசைத் தொழிலாக (cottage industry) உள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் 'ஜெரோ தலாங் தியாஹ்' (Jero Dalang Diah) என்ற உள்ளூர் கலைஞ்சர் அந்த கலையை ஜப்பான் நாட்டில் இருந்து கற்றுக் கொண்டு வந்து இங்கு மற்றவருக்கு கற்றுக் கொடுத்தாராம்.
- பபியன் துறைமுகம் (Pabean Harbour)
'சிங்கராஜாவின்' மிகப் பழைய துறைமுகம் (harbor) இது. இந்தப் பகுதிக்கு முதலில் வந்தவர்கள் இந்தோனேசியாவின் அர்சிபாலிகோவினர் (Indonesian archipelago) ஆவர் . அவர்களின் சந்ததியினர் என்றும் அந்தப் பகுதிகளில் வசிக்கின்றார்கள்.
- புற ஜகத் நாதா (Pura Jagat Natha )
'புலேலேங்' (Buleleng) அரசுப் பகுதியில் உள்ள இந்துக்களின் ஆலயம் . இந்த ஆலய வளாகத்துக்குள் பல பாலியர்களின் ஆலயங்கள் உள்ளன. பத்மாசனத்தில் அமர்ந்து உள்ளது போல (padmasana shrine) 1970 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு உள்ள மிகப் பெரிய ஆலயமும் இதற்குள் உள்ளது. அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் காண வேண்டியவை .
- புரி சினார் நடிபுட்ரா (Puri Sinar Nadiputra)
முன்னர் மாளிகையாக (palace) இருந்த 'புரி சினார் நடிபுட்ரா' தற்போது துணிகள் நெய்யும் இடமாக உள்ளது. இங்கு சில்க் (Silk) மற்றும் பஞ்சுத் துணிகளை (Cotton Ikat) நெய்வதைக் காணலாம். அதன் அருகில் அவற்றை விற்பனை செய்யும் கேந்திரமும் உள்ளது.
- 'சிங்கராஜாவின்' சீனர்கள் ஆலயம் (Singaraja Chinese Temple)
ஜலன் ஹசானுட்டின் மற்றும் ஜலன் எர்லாங்கா என்ற இடத்தை ஒட்டி அமைந்துள்ள சீனர்களின் ஒரே ஆலயம் இங்கு உள்ளது.
Location Map of Singaraja
Click here to view the Google Map to Singaraja.
|