சுகாவதி , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியின் 'கியன்யாரில்' (Giyanyar) உள்ளது 'சுகாவதி' (Sukavati) என்ற கிராமம். இது கைவேலை பொருட்களுக்கு சிறந்த இடம். 'பசர் சேனி' (Pasar Seni) அல்லது 'கலை பொருள் விற்பனை' (Art Market) நிலையம் என்பது இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ளது. அதில் கைவேலை பொருட்கள் விற்கப்படுகின்றன. அதன் அருகில் உழவர்கள் கூடும் (Farmers's Market ) சந்தையும் உள்ளது. அவற்றின் பின்புறத்தில் மர வேலைகள் செய்த பொருட்களின் (woodcarvings) விற்பனை நிலையமும் உள்ளது.
இந்த கிராமத்தில் பல புனித இடங்கள் உள்ளன. இங்கு 'வாயாங் குலித்' (wayang kulit) எனப்படும் பொம்மலாட்ட (shadow puppet) கலை அரங்கம் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் இங்கு 'க்லுங்குங் ராஜ்ய' (Kingdom of Klungkung) இருப்பிடத்தின் ஒரு பகுதி இருந்தது. அதனால் இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் நலிந்த நிலையில் உள்ள மன்னர்களின் அரண்மனை மற்றும் அவர்களது ஆலயங்களைக் காணலாம். ஆனால் அவை பொது ஜனங்களுக்கு திறந்து விடப்படுவது இல்லை.
Location Map of Sukawati
'சுகாவதி' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
 Sukawati Farmer's Market Author: 㣠(Creative Commons Attribution 3.0 Unported)
|
|
|