தபனான் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
பாலியின் ஒரு ராஜ்யப் பகுதி மற்றும் நிர்வாகப் பகுதி உள்ள இடமே 'தபனான்' (Tabanan) . 849 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் ஜனத் தொகை (population ) 2000 வருடக் கணக்கின்படி 387000 மக்கள் ஆகும். இந்த பகுதியின் உள்ளே உள்ள பாலியின் இரண்டாவது உயரமான 'படுகாரு' (Batukaru) என்ற மலையின் உயரம் 2276 மீட்டர் ஆகும். இந்த இடம் ஒரு காலத்தில் ஆட்சியாளர்களின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது.
‘தபனான்’ வியாபார மையம். இங்கு பார்க்க வேண்டிய இடம் தபனன் மற்றும் பநேபல் என்ற இடத்துக்கு செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கில் பறக்கும் 15 விதமான வண்ணத்துப் பூச்சிகள் (butterflies) உள்ள 'தமன் குபு குபு' (Taman Kupu-Kupu) என்ற பார்க் மற்றும் 'சுபக்' (Subak) மியுசியம் (Museum) போன்றவை.
சுபக் மியூசியத்தில் விவசாய சம்மந்தப்பட்ட பொருட்களை ( irrigation and agriculture) வைத்து உள்ளதினால் விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவர்களே அதை ரசிக்க முடியும்.
Location Map of Tabanan
‘தபனான்’ உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|