தமன் நாஷனல் பாலி பரத், வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'தமன் நாஷனல் பாலி பரத்' (Taman Nasional Bali Barat) என்பது மேற்கு பாலியின் மேற்குப் பகுதியில் பெரும் இடத்தில் அமைந்து உள்ள தேசிய பூங்கா ஆகும். 19000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ள அதன் ஒரு பகுதி கடலில் நீச்சலடிக்கும் இடங்களை (dive sites) உள்ளடக்கி அதைத் தொட்டவாறு அமைந்து உள்ளது.
இங்கு மலை மீது ஏறிச் செல்லும் (Trekking) இடங்களும் உள்ளன. ஒரு காரில் சென்றால் இந்த இடத்தை தெற்கு பாலியில் இருந்து சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் (3-4 hours) சென்று அடையலாம். 'லோவினாவில்' (Lovina) இருந்து ஒன்றரை மணி நேரத்தில் (1 1/2 hours) செல்லலாம்.
'பாலி ஸ்டார்லிங்' (Bali Starling) எனப்படும் அபூர்வமான மற்றும் பாலியின் விசேஷப் பறவைகள் இங்கு மட்டுமே காணப்படும். ஆனால் அவற்றை பலரும் வேட்டை (poaching) ஆடி விடுவதினால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. அதனால் அரசினர் அவற்றை பிடித்து கூண்டில் அடைத்து அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கின்றார்கள்.
நீங்கள் 'தமன் நாஷனல் பாலி பரத்' பார்க்கில் மலை ஏற விரும்பினாலோ இல்லை காரில் சவாரி செய்ய விரும்பினாலோ அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெற்றுக் கொண்டு வர வேண்டும்.
Location Map of Taman Nasional Bali Barat
'தமன் நாஷனல் பாலி பரத்' பார்க் உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|