தரோ , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'தரோ' (Taro) என்பது பாலியின் முன் காலத்தில் இருந்த மிகப் பழைய இடமாகும். இங்கு 'பூர குனுங் இவுங்' என்ற ஆலயம் உள்ளது. கிழக்கு ஜாவாவில் உள்ளதைப் போலவே இதுவும் மூன்று அடுக்கு (three-tier) ஆலயமாகும். எட்டாவது நூற்றாண்டில் (8 th Centuri) ஜாவாவை சேர்ந்த துறவியான 'ரிஷி மார்க்கண்டேயா' (sage Rsi Markandya) தனது சீடர்களுடன் இங்கு வந்ததாக ஐதீகம் உள்ளது.
இந்த கிராமத்தில்தான் பல விழாக்களிலும் பலியிடப்படும் கால்நடைப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் தற்போது பலி இடும் பழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக அந்த மிருகங்களை பூஜைக்கு பயன்படுத்தியப் பின் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். அதனால் அந்த மாடுகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே உள்ளது.
மேலும் இங்கு யானைகள் மீது சவாரி செய்யும் பார்க்கும் (Elephant Safari Park) உள்ளது. அங்கு யானைகளின் கலைக் கூடமும் உள்ளது.
Location Map of Taro
இந்த கிராமம் உள்ள இடத்தைப் பார்க்க இங்கே கிளிக்செய்யவும்.
|
|
|